நீர்கொழும்பு
மாநகர சபையின் மாதாந்த அமர்வை செய்தி சேகரிக்கச் சென்ற போது ஊடகவியலாளர் பிரடி
கமகேயை தாக்கிய சம்பவம் தொடர்பாக தாக்குதலை திட்டமிட்ட அரசியல்வாதியான
நீர்கொழும்பு பிரதி மேயர் தயான் லான்ஸாவை கைது செய்யமாறு வலியுறுத்தி இன்று
சனிக்கிழமை (25) மாலை நீர்கொழும்பு பிரதான பஸ் நிலையம் முன்பாக மகஜரொன்றில்
கையெழுத்து பெறும் நிகழ்வும் துண்டுப்பிரசுர
விநியோகமும் இடம்பெற்றது.
இதனை ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக்
குழுவும் > நீர்கொழும்பு ஊடகவியலாளர் ஒன்றியமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
மேல் மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக்
கட்சியின் நீர்கொழும்பு அமைப்பாளருமான ரொயிஸ் பெர்னாந்து, நீர்கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி
உறுப்பினர்களான வைத்தியர் ஹென்ரி ரொஸைரோ,
கிஹான் பெர்னாந்து, சங்கீத் பெர்னாந்து> பிரதேச
ஊடகவியலாளர்கள் உட்பட பலர் மகஜரில்
கையொப்பமிட்டனர்.
அத்துடன்
தாக்குதல் சம்பவத்தை விளக்கியும்> சம்பவத்திற்கு
எதிர்ப்பு தெரிவித்தும் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சகலரையும் கைது
செய்யுமாறு வலியுறுத்தியும்> ஊடக சுதந்திரத்தை நிலை நிறுத்துமாறும் கோரி அங்கு
பொது மக்களுக்கு துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.
No comments:
Post a Comment