தமது வேலைத்தளங்களில் தொழிற் சங்கங்களை அமைப்தற்கு
இடமளிக்குமாறும், ஊழியர்களுக்கு உரிய சம்பளத்தை வழங்குமாறும், சம்பளத்தை அதிகரிக்குமாறும்
, ஊழியர்களிடம் பாலியல் லஞ்சம் கோருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்;, மேலும் பல்வேறு
காரணங்களை முன்வைத்து நேற்று புதன்கிழமை மாலை
(22) கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுயாதீன தொழிற்சங்க ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இலங்கை வங்கி ஊழியர் சஙகம், பெண்கள் தொழிலாளர் ஒத்துழைப்புச்
சங்கம்,
சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொதுச் சேவைச் சங்கம், ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம்
உட்பட பல்வேறு தொழிற் சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்கின.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 800 இற்கும் மேற்பட்ட
ஊழியர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment