Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, June 22, 2016

மதுபானம் , சிகரட் மற்றும் போதைப் பொருளுக்கு எதிராக நீர்கொழும்பில் நடைபவனி

மது பாவனைக்கு அடிமையாவதிலிருந்தும்  புகைத்தல் மற்றும் அபாயகரமான ஒளைடதங்களை பாவித்தலில் இருந்தும் இளைஞர்களையும் பாடசாலை மாணவர்களையும் மீட்பதற்காகவும் மற்றும் போதைப் பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொது மக்களுக்கு  விழிப்பூட்டும் வகையில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) நீர்கொழும்பு தளுபத்தை பிரதேசத்தில்  நடைபவணி இடம்பெற்றது. 
 நீர்கொழும்பு பொலிஸார், தளுபத்தை மகாவித்தியாலய அதிபர், ஆசிரியர்கள் , மாணவர்கள் இணைந்து  இந்த  நடைபவணியை ஏற்பாடு செய்திருந்தனர்.


நடைபவணியில் பங்குபற்றியோர்  மதுபானம் , சிகரட் மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான சுலோக அட்டைகளையும் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.




No comments:

Post a Comment