Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, March 7, 2020

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி (Photos)


 நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின்  நிறைவு விழா  5-3-2020 அன்று மாலை அதிபர் நா. புவனேஸ்வர ராஜா  தலைமையில் பாடசாலை மைதானத்தில்  நடைபெற்றது.
 நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஸா கலந்து கொண்டார். ,சிறப்பு விருந்தினர்களாக மேல் மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர்  ஆர். உதயகுமார், நீர்கொழும்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.ஏ.சி. பெர்னாந்து, நீர்கொழும்பு பிரதிக்கல்வி
பணிப்பாளர் பி.சி.சி பெர்னாந்து, நீர்கொழும்பு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.ஏ.எம்.எஸ். துஷாரி; ஆகியோர் கலந்து சிறப்பித்னர்.








போட்டிகளின் நிறைவில்; 513 புள்ளிகளை பெற்று திருக்கேதீஸ்வர இல்லம் முதலாம் இடத்தையும், 413 புள்ளிகளைப் பெற்று நகுலேஸ்வர இல்லம் இரண்டாம் இடத்தையும், 408 புள்ளிகளைப் பெற்று திருக்கோணேஸ்வரம் மூன்றாம் இடத்தையும், பெற்றுக் கொண்டது.











படவிளக்கம் -  முதல் மூன்று இடங்களைப் பெற்ற இல்லங்களுக்கு கல்லூரி அதிபர் புவனேஸ்வர ராஜா,  பிரதி அதிபர் திருமதி புஸ்பராணி ஆகியோர் கிண்ணங்களை வழங்குவதையும், மாணவர்கள் பங்குபற்றிய போட்டி நிகழ்ச்சிகளையும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஸா உரையாற்றுவதையும், அவர் பொன்னடைப் போர்த்தப்பட்டு  நினைவுப் பரிசு வழங்கி  கௌரவிக்கப்படுவதையும், பிரதிக் கல்விப் பணிப்பாளர்  ஆர். உதயகுமார் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.



No comments:

Post a Comment