Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, March 2, 2020

மஹர சிறைச்சாலையில் உள்ள பள்ளிவாசல் இந்த குண்டு தாக்குதலின் பின்னர் மூடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரதமரிடம் முறைப்பாடு செய்துள்ளோம் - முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஹுப் ஹக்கீம்


நீர்கொழும்பு அல் - ஹிலால் மத்திய கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு  நேற்று செவ்வாய்க்கிழமை முதல் நாளை வியாழக்கிழமை வரை மூன்று தினங்கள் கல்விக் கண்காட்சியும் களியாட்ட நிகழ்வும் இடம்பெற்றது.
26-2-2020 இரண்டாவது   தின நிகழ்வு இடம்பெற்றது. மாலை நடைபெற்ற நிகழ்வில்  முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஹுப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
 கல்லூரி அதிபர் எம். எஸ்.எம். ஸஹீர்  தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் மேல் மாகாண சபையின்  முன்னாள்  உறுப்பினர் ஷாபி ரஹீம் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஹுப் ஹக்கீம் அங்கு உரையாற்றுகையில் கூறியதாவது,




கல்வி அமைச்சர் இந்த கல்லூரியை தேசய பாடசாலையாக மாற்றுவதற்கான கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ளார். கல்வி அமைச்சர் எனது நண்பர் அடுத்த தடைவை நான் அவரை சந்திக்கும்போது இந்த விடயத்தை அவருக்கு ஞாபகப்படுத்துவேன்.அத்துடன் இந்த பாடசலைக்கு மூன்று மாடிக்கட்டத்திற்கான தேவை உள்ளதாக அதிபர் என்னிடம் தெரிவித்தார். நிச்சயமாக அதனை நிறைவேற்றும் அனைத்து முயற்சிகளையும் நான் மேற்கொள்வேன்.




கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி எமக்கு மறக்க முடியாத நாள். இங்குள்ள கட்டுவபிட்டிய தேவாலயத்னி மீது மெற்கொள்ளப்பட்ட தாக்குதலில் முழு நீர்கொழும்பு நகரமும் பதட்டத்தில் இருந்தது. சகலரும் அச்சத்துடன் இருந்தனர். சில நாள் கடந்து நகரில் கலவரம் ஏற்பட்டது. அந்த சம்பவத்தை நாங்கள் பக்குவமாக கையாணடு அந்த ஆபத்திலிருந்து மீண்டோம். தீவிரவாதம் என்பது சகல பக்கத்திலிருந்தும் மோசமாக தலை விரித்தாடுகிறது. எமது சமூகத்திற்குள் இப்படி ஒரு கும்பல் இருப்பதை நாங்கள் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தற்போது மற்றைய சமூகத்திலிருக்கும் கும்பல்கள் இந்த சம்பவத்தை வைத்து எங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

மஹர சிறைச்சாலையில் உள்ள பள்ளிவாசல்  இந்த குண்டு தாக்குதலின் பின்னர் மூடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களிலும் பத்திரிகைகளிலும் செய்தி பரவி வருகிறது. தற்போது அங்கு வேறு மத சின்னங்களை வைத்துள்ளதாகவும், அங்கு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஓய்வு அறையும் அமைக்கப்பட்டுள்ளதாக கலக்கம் நிலவுகிறது.
இதுதொடர்பாக பிரதமரிடம் முறைப்பாடு செய்துள்ளோம். அவர் சிறைச்சாலைக்கு பொறுப்பான அமைச்சரிடம் கதைத்து பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுமாறு தெரிவித்திருக்கிறார். விரைவில் அந்த பிரச்சினையை தீர்த்து தருவார்கள் என எதிர்ப்பார்க்கிறோம்.
இனங்களுக்கிடையில் இருக்கும் ஒற்றுமையை குழைக்கம் வகையில் எல்லா தரப்பிலிருந்தும் தீவிரவாதிகள் தலைதூக்கி வருகிறார்கள். இவர்களை எல்லாம் கையாளவது இலேசான விடயம் அல்ல.
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் மூன்று மொழிகளிலும் கற்பிக்கப்படும்  பாடசாலைகள் மிகக் குறைவு அவ்வாறான ஒரு பாடசாலை இந்த பாடசாலையாகும். 1800 மாணவர்கள் கல்வி பயிலும் இந்த பாடசாலையை வளர்த்தெடுத்து இனங்களுக்கிடையில் ஒற்றுமையை, மொழி ரீதியாக எங்களுக்கிடையில் உள்ள ஆளுமையை வளர்த்தெடுக்கம் கலாபீடமாக இந்த பாடசாலையை ஆக்குவது இலகுவான விடயமாகும்.





வருகின்ற காலம் மிக சவாலான காலமாகும். நடைபெறவுள்ள தேர்தலில் எமது சமூகம் சார்ந்த  அரசியல் பிரிதிநிதி;த்துவத்தை பெற்றுக் கொள்ளும் முயற்சி , அதனை எவ்வாறு கையாளப் போகிறோம் என்பது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.


1 comment:

  1. Best Las Vegas Casino Hotels - MapYRO
    Looking for the cheapest and quickest ways 안양 출장샵 to get from Las Vegas Casino Hotels 세종특별자치 출장샵 to 김천 출장안마 MGM Grand Las Vegas? Find reviews and discounts.What 영천 출장안마 are 김천 출장안마 the best Las Vegas Casino hotels?

    ReplyDelete