மன்னார் நீதிமன்றத்தின் மீதான
தாக்குதலைக் கண்டித்து சட்டத்தரணிகளும் நீதவான்களும் இன்று
வெள்ளிக்கிழமையிலிருந்து பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர். இதனால் சகல
நீதிமன்றங்களின் நடவடிக்கைகளும் முடங்கியுள்ளன
இதேவேளை, மன்னார் நீதிமன்றத்தின் மீதான
தாக்குதலைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை நீர்கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தை சேர்ந்த சட்டத்தரணிகள்
பணிபகிஷ்கரிப்பிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்த்திலும் ஈடுபட்டனர்.
நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம், மேல்
நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்ளை சேர்ந்த சட்டத்தரணிகளே இந்த
ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுப்பட்டனர்.
இன்று முற்பகல் 10.30 மணியளவில்
நீர்கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றின் முன்பாக ஆரம்பமான பேரணி நகர மத்திக்கு வந்து
பின்னர் முற்பகல் 11.30 மணியளவில் நீர்கொழும்பு
மஜிஸ்ரேட் நீதிமன்றின் முன்பாக நிறைவடைந்தது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட
சட்டத்தரணிகள் எதிர்ப்பு சுலோகங்களை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்..
No comments:
Post a Comment