Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, February 4, 2020

72 ஆவது சுதந்திர தினத்தை மிகச் சிறப்பாக கொண்டாடிய நீர்கொழும்பு முஸ்லிம்கள்


இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை நீர்கொழும்பு வாழ் முஸ்லிம் மக்கள் மிகச் சிறப்பான முறையில் கொண்டாடினர்.
நீர்கொழும்பு பெரியமுல்லை பெரிய பள்ளிவாசல்  முன்றலில் இதற்கான பிரதான நிகழ்வு   பெரிய பள்ளிவாசல் தலைவர் அஷ் செய்க் பரூத் (இஹ்சானி)  தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக நீர்கொழும்பு மேயர் தயான் லான்ஸா கலந்து கொண்டார். மேல் மாகாண முன்னாள் உறுப்பினர் ஷாபி ரஹீம், நீர்கொழும்பு பிரதி மேயர் எம்.ஏ. இஸட். பரீஸ், அல்- ஹிலால் மத்திய கல்லூரி அதிபர் எம்.எஸ்.எம். சஹீர் , பள்ளிவாசல் மற்றும் பிரதேச முக்கியஸ்த்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.













சுதந்திர தின நிகழ்வை  யூத் செலன்சர்ஸ், தாருல் புர்கான் அல் கரீம் மத்ரஸா, ஜம்மியத்துல் உலமாவின் நீர்கொழும்பு கிளை, நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசல், ஹிலாலியன்ஸ் நலன்புரி அமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
அல்- ஹிலால் மத்திய கல்லூரி முன்பாக இருந்து பேரணியாக வந்த மத்ரஸா மாணவர்கள், அதிதிகள், பிரதேசவாசிகள்,  கூட்டத்தை ஏற்பாடு செய்த ஐந்து அமைப்புக்களினதும்  அங்கத்தவர்கள் பெரிய பள்ளிவாசலை வந்தடைந்தனர். பள்ளிவாசல் முன்றலில் பிரதான நிகழ்வு இடம்பெற்றது.
நீர்கொழும்பு மேயர் தயான் லான்ஸா தேசியக் கொடியை ஏற்றினார்.  வரவேற்புரையை பெரிய பள்ளிவாசல் தலைவர் அஷ் செய்க் பரூத் (இஹ்சானி) நிகழ்த்தினார்.   சுதந்திர தின பிரதான உரையை கரீம் மாஸ்டர் நிகழ்த்தினார். மேயர் தயான் லான்ஸா பிரதம அதிதிக்கான உரையை நிகழ்த்தினார். அல்- ஹிலால் மத்திய கல்லூரி அதிபர் எம்.எஸ்.எம். சஹீர் சிறப்புரை உரை நிகழ்த்தினார்.









 எஸ்.பி.எம் சிப்லி இலங்கையின் சுதந்திர தினம் தொடர்பாக தமிழில் பாடல் ஒன்றை பாடினார்.


No comments:

Post a Comment