இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு
எதிராக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும் மாலபே சைட்டம் நிறுவனத்திற்கு எதிர்ப்பு
தெரிவித்தும் இன்று திங்கட்கிழமை (20) நண்பகல்
உணவு வேளையின் போது நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள்,
தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில்
பங்குபற்றினர்.
ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டவர்கள் எதிர்ப்பு
வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பினர்.
மாலபே சைட்டம் நிறுவனத்தை அரசாங்கத்தின்
கீழ் கொண்டு வரவேண்டும் எனவும், இதுபோன்று தகுதியற்ற தனியார் வைத்திய கல்வி நிறுவனங்களுக்கு அரசாங்கம் அனுமதியளிக்கக் கூடாது எனவும் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.





No comments:
Post a Comment