ஜா-எல பிரதேசத்தில் உள்ள
ஹோட்டல் ஒன்றுக்குள் நுழைந்து துப்பாக்கியை
காட்டி அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பாக குற்றச்சாட்டு
சுமத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த நிலையில்
கடந்த செவ்வாய்க்கிழமை (21) இரவு திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமான பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் பிரேதத்தை பொறுப்பேற்க
இரண்டு பெண்கள் உரிமை கோரியுள்ளனர்.
பன்னிபிட்டிய பிரதேசத்தைச்
சேர்ந்த மல்லவ ஆராச்சிகே தொன் சுசில் மல்லவ
ஆராச்சி (54 வயது) என்ற பொலிஸ் பரிசோதகரே மரணமானவராவார்.
இந்த மரணம் தொடர்பாக நீர்கொழும்பு பதில் நீதவான்
தயா விமல் தமேல் மரண விசாரணை நடத்தி பிரேத பரிசோதனை செய்யுமாறு உத்தரவிட்;டிருந்தார்.
திடீரென ஏற்பட்ட மாரடைப்பு
காரணமாக இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி ஏ.பி.எஸ்.பெர்னாந்து மேற்கொண்ட
பிரேத பரிசோதனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பொலிஸ் பரிசோதகரின் மரணத்தைத் தொடர்ந்து
பிரேதத்தைப் பொறுப்பேற்க இரண்டு பெண்கள் உரிமை கோரியள்ளனர். அதில் ஒருவர் திருமணச் சான்றிதழை காண்பித்து இறந்தவர் தனது கணவர்
என்பதை நிரூபித்துள்ளார்.
பூர்ணிமா சிரோமி குணசேகர
என்பவரே இறந்தவர் தனது கணவர் என்பதை சான்றிதழ் மூலமாக உறுதிப்படுத்தியவராவார். இதனை
அடுத்து அவரிடம் பிரேதத்தை ஒப்படைக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் பொலிஸாருக்கு
உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment