Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, February 23, 2017

சட்டவிரோதமாக இரண்டு கடவுச் சீட்டுக்கள் வைத்திருந்தமை தொடர்பாக அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிரான வழக்கு மே 16 வரை ஒத்திவைப்பு

சட்டரீதியற்ற கடவுச்சீட்டைப் பயன்படுத்தி  கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வெளிநாடு செல்ல முற்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக  முன்னாள் அமைச்சர்  விமல் வீரவங்சவுக்கு  எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று வியாழக்கிழமை (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது  இந்த வழக்கை எதிர்வரும் மே மாதம் 16  ஆம் திகதிக்கு நீர்கொழும்பு மேலதிக நீதவான் கபில துஸ்ஸந்த எபிட்டவல உத்தரவிட்டார்.

  பாராளுமன்ற உறுப்பினர்  விமல் வீரவங்ச நீதிமன்ற அனுமதியைப் பெற்று இன்றைய தினம் பாhளுமன்ற  அமர்வில் கலந்து கொள்ளாததன் காரணமாக மன்றில் ஆஜராக முடியவில்லை என  பாராளுமன்ற உறுப்பினர்  விமல் வீரவங்சவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள்  விசாரணையின்போது நீதவானிடம் தெரிவித்தனர். 

பின்னர் பாராளுமன்ற அமர்வு நடைபெறாத  தினம் ஒன்றில் விசாரணை நடத்தும் வகையில் இந்த வழக்கை எதிர்வரும் மே மாதம் 16 ஆம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதவான்  உத்தரவிட்டார்.

  பாராளுமன்ற உறுப்பினர்  விமல் வீரவங்சவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க மற்றும் சட்டத்தரணி தினேஸ் த சொய்ஸா ஆகியோர் மன்றில் ஆஜரானார்கள்

முறையற்ற கடவுச் சீட்டைப் பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச வெளிநாடு செல்ல வருகை தந்தபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.



வெளிநாடு செல்வதற்காக பல வருடகாலமாக  தான் பயன்படுத்தி வந்த கடவுச்சீட்டு காணாமல் போனதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து, பின்னர் புதிய கடவுச் சீட்டைப் பெற்றுள்ளதோடு பழைய கடவுச்சீட்டை ரத்துச் செய்துள்ளார். பின்னர் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி   வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் வந்தபோது காணாமல் போனதாகக் கூறப்பட்ட கடவுச் சீட்டை  அவர் சமர்ப்பித்துள்ளார் என கூறப்படுகிறது.






No comments:

Post a Comment