5 கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியான 5 கிலோகிராம் ஹெரோயின்
போதைப் பொருளை சூட்சுமமான முறையில் இலங்கைக்கு கடத்தி வந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ்
போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதோடு போதைப் பொருளையும்
கைப்பற்றியுள்ளனர்.
நேற்று சனிக்கிழமை அதிகாலை 1.40 மணியளவில் தோஹா கட்டாரிலிருந்து
கிவ்.ஆர்.668 இலக்க (ஞசு668) விமானத்தில் இலங்கை
வந்தடைந்த குராம் சியாத் அஹமத் என்ற 25 வயது இளைஞரே கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜையாவார்.
சந்தேக
நபர் கொண்டு வந்த பயணப் பொதி தொடர்பில் சந்தேகப்பட்ட பொலிஸ் போதைப் பொருள்
தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பயணப் பொதியை சோதனை செய்தபோது அதில் ரப்பர் பாபிஸ்
இருந்துள்ளதை அவதானித்துள்ளனர். அதனை மேலம் சோதனை செய்தபோது சூட்சுமமான
வகையில் மூன்று ரப்பர் கார்பர்ட்களில் போதைப் பொருள் பதுக்கி வைத்துள்ளமை
கண்டுபிடிக்கப்பட்டது. 5500 கிராம் ஹெரொயின் போதைப் பொருள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மூலமாக நாட்டுக்குள் புதிய
முறையில் போதைப் பொருள் போதைப் பொருள்
கடத்தி வரப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆரம்ப
கட்ட விசாரணைகளின் பின்னர் நீர்கொழும்பு பதில் நீதவான் கே.ஜி. குணதாச முன்னிலையில் சந்தேக நபர் ஆஜர்
செய்யப்பட்டார்.
சந்தேக நபரை எதிர்வரும் 10
ஆம் திகதி வரை கொழும்பு போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவில் தடுத்து வைத்து மேலதிக விசாரணை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.



No comments:
Post a Comment