நீர்கொழும்பு
விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாள்
நிகழ்வு கல்லூரி மைதானத்தில் கல்லூரி அதிபர் என்.புவனேஸ்வரராஜா தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்வி
இராஜாங்க அமைச்சர் வி. இராதா கிருஷ்ணன் பிரதம அதிதியாகவும் மேல் மாகாண சபை
உறுப்பினர் ஜே.ரொயிஸ் விஜித பெர்னான்டோ, கௌரவ அதிதியாகவும், நீர்கொழும்பு வலய கல்விப் பணிப்பாளர்
கே.ஏ.சி. பெர்னான்டோ, கல்லூரியின்
காப்பாளர் திருமதி. ஜெயம் விஜயரத்தினம் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து
சிறப்பித்தனர்.
படவிளக்கம் -
அதிதிகள் அழைத்து
வரப்படுதல் கொடிகள் ஏற்றி வைத்தல், மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி (படங்கள் 1 முதல் 4 வரை)
ஏனைய படங்கள் -
ராஜாங்க அமைச்சர்
வி. இராதா கிருஷ்ணன் மரதன் ஓட்டப் போட்டியில் வெற்றிபெற்ற நகுலேஸ் இல்ல மாணவன் செல்வன் அனோல்ட்டுக்கு கிண்ணம் வழங்குவதையும், நீர்கொழும்பு வலய உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் அஜித் அதிகாரி
போட்டிகளில் முதலாமிடத்திற்கு வந்த முன்னேஸ்லரம் இல்லத்திற்கு வெற்றிக்
கிண்ணம் வழங்குவதையும்,
கல்லூரி அதிபர் என்.புவனேஸ்வரராஜா, மேல் மாகாண சபை உறுப்பினர் ஜே.ரொயிஸ் விஜித பெர்னான்டோ, ஆகியோர் உரையாற்றுவதையும், கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதா கிருஷ்ணனுக்கு
கல்லூரி அதிபர் நினைவுச் சின்னம் வழங்குவதையும் படங்களில் காணலாம்.
செய்தி:- எம்.இஸட். ஷாஜஹான்









No comments:
Post a Comment