
பமுனுகம புல்லஹேன பாலம் அருகில் உள்ள வீடொன்றில்
இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக 2016 ஆம் ஆண்டு நீர்கொழும்பு பமுனுகம பொலிஸாருக்கு
கிடைத்த முறைப்பாட்டை
மேலதிக விசாரணை
செய்வதற்கான பொறுப்பு நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியலால்
தசநாயக்கவினால் சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் திருடப்பட்ட டெப் கணினி உபகரணம்
தொடர்பாக ஆராய்ந்த பொலிஸார் டெப் உபகரணத்தின்
எமி இலக்கத்தின் அடிப்படையில் ஜா-எல லினஸ்வெல்ல பிரதேசத்தில் வைத்து டெப்
உபகரணத்துடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது
அடகு வைக்கப்பட்ட இரண்டு மோதிரங்களையும் பிரேஸ்லட் ஒன்றையும் பொலிஸார்
மீட்டுள்ளனர். அந்த நகைகள் பமுனுகம புல்லஹேன பாலம் அருகில் உள்ள வீடொன்றில் திருடப்பட்டவை
என அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
மிஹிது குலசூரிய வர்ண பேடிகே அன்டன் நுவன் துசார
சில்வா (38 வயது) என்பவரே
திருடப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்ட சிறைக்கைதியாவார். சந்தேக நபர்; 18 மாத காலம் சிறைத்
தண்டனை விதிக்கப்பட்டு மஹர சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு தெயட்ட
கிருளு கண்காட்சி குளியாபிட்டியவில் நடைபெற்றபோது சிறைச்சாலை திணைக்களத்தின்
கண்காட்சிக் கூடத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது தப்பியோடி தலைமறைவாகியிருந்துள்ளமை
விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.;.
நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்
பியலால் தசநாயக்கவின் ஆலோசனையின் பேரில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹனவின்
வழிகாட்டலில் சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.ஆர்.ஏ. ஜி. மனோகர, பொலிஸ்
பரிசோதகர்களான ஏ. எம். ரஹுப், எச்.எம்.சந்தன, டெனி பெரேரா, கான்ஸ்டபிள்களான
அமல், ஜயசிங்க , சமித் ஜயசேகர ஆகியோர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேக நபரை பமுனுகம பொலிஸாரிடம் ஒப்படைத்து
மன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார்; தெரிவித்தனர்.
No comments:
Post a Comment