ஓஸ்ரியா அரசாங்கத்தின் உதவியுடன் 15 ஆயிரம் மில்லியன்
ரூபா செலவில் கொச்சிக்கடை பிரதேசத்தில் மகா ஓயாவுக்கு குறுக்காக அமைக்கப்படவுள்ள புதிய
பாலத்திற்கான அடிக்கல்நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே
அமைச்சர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். இந்நிகழ்வு
இன்று ஞாயிற்றுக்கிழமை (12-2-2017) முற்பகல் இடம்பெற்றது.
கிறிஸ்தவ
மத விவகார காணி அபிவிருத்தி அமைச்சர் ஜோன்
அமரதுங்க, கிறிஸ்தவ மத விவகார பிரதி அமைச்சர் அருந்திக பெர்னாந்து, மேல் மாகாண சபை
உறுப்பினர்களான சட்டத்தரணி ரோஸ் பெர்னாந்து, ரொயிஸ் விஜித்த பெர்னாந்து, ஒஸ்ரிய அரசாங்கத்தின் பிரதி நிதிகள் , முன்னாள்
மாநகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள்,
சர்வ மதத் தலைவர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வின்
ஆரம்பத்தில் அமைச்சர் லக்ஷ்மன் கிரிஹெல்ல புதிய பாலத்திற்காகன விளம்பரப் பலகையை திரை
நீக்கம் செய்து வைத்தார். பின்னர் அதிதிகள் புதிய பாலத்திற்கான அடிக்கல்லை நாட்டினர்.
உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன்
கிரிஹெல்ல அங்கு இடம்பெற்ற வைபவத்தில் தொடர்ந்து
உரையாற்றுகையில் கூறியதாவது,
இரண்டு
பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து நல்லிணக்க அரசாங்கத்தை அமைத்துள்ளன. சுதந்திரம் கிடைத்து
69 வருட காலமாகியும் எதிர்பார்த்த அபிவிருத்தி
நாட்டில் நடக்கவில்லை. யுத்தத்தின் காரணமாக 30 வருட காலம் நாடு பின்னோக்கிச் சென்றது. அதற்கான அபிவிருத்தி வேலைத்திடங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்தை சக்தியுடையதாக ஆக்குவதற்காக புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டியுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். 13 இற்கு மேற்சென்று அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று கூறினார். அவர்
கூறியதை அவரால் செய்ய முடியவில்லை. அதனை சுதந்திரக் கட்சியுடன் இணைந்து நாங்கள் மேற்கொண்டு
வருகிறோம். இந்த வருடம் கம்பஹா மாவட்டத்தில் உள்ள 100 கிலோ மீற்றர் வீதிகள் புனரமைப்பு
செய்யப்படவுள்ளது. நல்ல்hட்சியை அமைப்பதற்கு கம்பஹா மாவட்ட மக்கள் அளப்பறிய பங்களிப்பை
வழங்கியுள்ளனர். கண்டி மாவட்ட மக்களும் அதுபோன்ற பங்களிப்பை ஐக்கிய தேசியக் கட்சிக்கு
வழங்கினர். இரண்டு தேர்தல்களில் தோல்வியடைந்த
மஹிந்த அணி தேர்தலில் மூலம் வெற்றிபெற இனி
முயற்சிக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்;சியும் 17 வருட காலம் எதிர் கட்சியாக இருந்தது.
ஆனால் ஆட்சியை கவிழ்ப்பதற்கு முயற்சிக்கவில்லை என்றார்.
கிறிஸ்தவ
மத விவகார காணி அபிவிருத்தி அமைச்சர் ஜோன்
அமரதுங்க அங்கு உரையாற்றுகையில் கூறியதாவது,
இரண்டு
மாவட்டங்களும், இரண்டு மாகாணங்களும் சந்திக்கும் இடத்தில் இந்த புதிய பாலம் அமைக்கப்படவுள்ளது.
ஒஸ்ரியா அரசாங்கத்திறகு நாங்கள் இதற்காக நன்றி கூறுகிறோம். தேர்தலில் தோல்வியடைந்தால்
அடுத்த தேர்தலில் போடடியிட்டு வெற்றி பெற மகிந்த
ராஜபக்ஷ முயற்சிக்க வேண்டும். மாறாக ஆட்சியை கவிழ்ப்பதற்கு ஆர்ப்பாட்டங்களை
நடத்தக் கூடாது. இங்கும் ஆர்ப்பாட்டம் நடக்கும் என நான் எதிர்பார்த்தேன் என்றார்.
செய்தியும் படங்களும். – எம். இஸட். ஷாஜஹான்
No comments:
Post a Comment