நீர்கொழும்பு
தளுபத்தை விவேகானந்த பாலர் அறிவாலய மாணவர்களின் கலை விழா வெள்ளிக்கிழமை (10-2-2017) மாலை நீர்கொழும்பு
இந்து இளைஞர் மன்ற கலாசார மண்டபத்தில்
தலைவர் ஜி. ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் , வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய
அதிபர். எம்.இஸட். ஷாஜஹான், தோப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய
பிரதி அதிபர் செல்வகுமார் , நுவரெலிய வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் செல்வி
எஸ்.பாமினி
ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் அதிதிகளின் உரைகள் , மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான பரிசளிப்பு என்பன இடம்பெற்றன.
படங்கள்- அதிதிகள் விளக்கேற்றுவதையும் நிகழ்வில் இடம்பெற்ற மாணவர்களின் கலை
நிகழ்ச்சிகளையும், வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய
அதிபர். எம்.இஸட். ஷாஜஹான், தோப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய
பிரதி அதிபர் செல்வகுமார் , நீர்கொழும்பு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின்
பிரதான குரு குகேஸ்வர குருக்கள் ஆகியோர் உரையாற்றுவதையும், தோப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய பிரதி அதிபர் செல்வகுமார் , நுவரெலிய வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் செல்வி எஸ்.பாமினி, தொழிலதிபர் கேசவன் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசில் வழங்குவதையும், பாலர் அறிவாலய மாணவர்களுடன் ஆசிரியைகள் நிற்பதையும் படங்களில் காணலாம்.





















No comments:
Post a Comment