இலங்கையின்
69 ஆவது தேசிய சுதந்திரத்தினத்தையிட்டு இன்று (4) சனிக்கிழமை நீர்கொழும்பு நகரில் சில
இடங்களில் விசேட சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
நீர்கொழும்பு
பெரியமுல்லையில் அமைந்துள்ள மஸ்ஜித் பஸ்ல் பள்ளிவாசலில் விசேட சுதந்திர தின நிகழ்வு நீர்கொழும்பு ஜமாஅத் தலைவர் ஜிப்ரி முஸ்தாக் அஹ்மத் தலைமையில் நடைபெற்றது. மௌலவி
அஸ்மத் அஹ்மத் சுதந்திர தின உரையை நிகழ்த்தினார். நிகழ்வில் நாட்டுக்கு நலம் வேண்டி
பிரார்த்தனை இடம்பெற்றது.
படம்: நிகழ்வில்
நீர்கொழும்பு ஜமாஅத் தலைவர் ஜிப்ரி முஸ்தாக் தேசியக் கொடியை ஏற்றுவதையும் மௌலவி
அஸ்மத் அஹ்மத் சுதந்திர தின உரை நிகழ்த்துவதையும், பங்குபற்றியவர்களையும் படங்களில்
காணலாம்.
செய்தியும் படங்களும். – எம். இஸட். ஷாஜஹான்
No comments:
Post a Comment