Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, January 31, 2017

நீர்கொழும்பு வலயக் கல்விக் காரியாலயம் நடத்திய தைப்பொங்கள் உற்சவம்

 மேல் மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்துடன் இணைந்து நீர்கொழும்பு வலயக் கல்விக் காரியாலயம் தைப்பொங்கள் உற்சவத்தை இன்று (31) செவ்வாய்க்கிழமை கட்டானை, நீர்கொழும்பு, ஜா-எல கல்விக் கோட்டங்களில் நடத்தியது.
இந்நிகழ்வில் தமிழ் மொழிப் பாடசாலைகள் மற்றும் சிங்கள மொழிப் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் பங்குபற்றினர்.

கட்டானை கோட்ட பாடசாலைகளின் தைப்பொங்கள் உற்சவம் திம்பிரிகஸ்கட்டுவ மகா வித்தயாலயத்தில் கோட்டப் பணிப்பாளர் சந்யா சில்வா தலைமையில் நடைபெற்றது.  நீர்கொழும்பு கல்விக் கோட்டப் பாடசாலைகளின் தைப்பொங்கள் உற்சவம் வித்தியாலங்கார மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட காட்சிகள்.


படங்கள் : நிகழ்வில் கல்விப் பணிப்பாளர்கள் அழைத்துவரப்படுவதையும், நீர்கொழும்பு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர்  உபாலி மதுரப் பெரும உரையாற்றுவதையும் விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரி, வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளையும், பால் பொங்க வைக்கப்படுவதையும், சிங்களப் பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நடனத்தையும் பங்குபற்றிய மாணவர்களையும் படங்களில் காணலாம்.

செய்தி:- எம்.இஸட். ஷாஜஹான் 























No comments:

Post a Comment