Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, January 30, 2017

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க திவுலபிட்டிய பிரதேச செயலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பு பிரதேச செயலக ஊழியர்கள் கண்டனப் பேரணியும் ஆர்ப்பாட்டமும்

திவுலபிட்டிய பிரதேச செயலாளருக்கு பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி மூலமாக அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்பஹா மாவட்டத்திற்குட்பட்ட சகல பிரதேச செயலகங்களிலும் இன்று  (30)  எதிர்ப்பு நடவடிக்கைகள்  இடம்பெற்றதுடன் ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
கட்டானை மற்றும் நீர்கொழும்பு பிரதேச செயலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பிரதேச செயலகங்களுடன் இணைந்து பணியாற்றும்  சமுர்தி ஊழியர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டனர்.
நீர்கொழும்பு பிரதேச செயலக ஊழியர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டப் பேரணி பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து பிரதான வீதி, கிறீன்ஸ் வீதி, கஸ்டம்ஸ் வீதி வழியாக மீண்டும்  பிரதேச செயலகத்தை வந்தடைந்தது.  ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டவர்கள் எதிர்ப்பு கோசங்கள் எழுப்பியதுடன் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.

                     Negombo




அரச சேவையில் கை வைக்காதே, மன்னிப்புக்கு நிபந்தனைகள் வேண்டாம், நிபந்தனைகள் இல்லாமல் மன்னிப்புக் கேள், அரச சேவைக்கு முட்டாள் அரசியல் வேண்டாம் என்பன போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.
                    Katana



இன்றைய தினம் பிரதேச செயலக ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதன் காரணமாக சேவை பெறுவதற்காக வருகை தந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன்   திரும்பியதை அவதானிக்க முடிந்தது.





No comments:

Post a Comment