Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, January 25, 2017

பிபில மெதகம பிரதேசத்தில் இலங்கை வங்கியின் ஏ.ரி.எம். இயந்திரத்தை உடைத்து 57 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட நபர்களில் மூவர் கைது: 30 இலட்சம் ரூபா பணத்துடன் வாகனம் மீட்பு

கடந்த  20 ஆம் திகதி   (20-1-2017) பிபில மெதகம பிரதேசத்தில் அமைந்துள்ள  இலங்கை வங்கி கிளையின் ஏ.ரி.எம். இயந்திரத்தை உடைத்து 57 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தை கொள்ளையிட்ட நபர்களில் மூன்று பேரை   நீர்கொழும்பு சட்டத்தை நிலை நிறுத்தும் பொலிஸ் பிரிவினர்  கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பணத்தில் ஒரு தொகை பணத்தையும்  கொள்ளைச் சம்பவத்திற்கு  பயன்படுத்திய வாகனத்தையும்  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

  சம்பவம் தொடர்பாக பொலிஸார் தெரிவித்ததாவது,
இந்த மாதம் 20 ஆம் திகதி பிபில மெதிகம பிரதேசத்தில் அமைந்துள்ள  இலங்கை வங்கி கிளையின்; ஏ.ரி.எம். இயந்திரத்தை உடைத்து 50 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக மெதகம பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது கொள்ளைச் சம்பவத்திற்கு  பயன்படுத்திய வாகனத்தின் இலக்கத்தை வைத்து அந்த வாகனம் நீர்கொழும்பு  பிராந்திய பொலிஸ் பிரிவைச் சேர்ந்த வாகனம்   என்பதை அறிந்துள்ளனர்.


இது தொடர்பாக நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியலால் தசநாயக்கவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளைச் சம்பவத்திற்கு  பயன்படுத்திய வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த வாகனம்  நீர்கொழும்பு நகரில் வாடகைக்கு பெறப்பட்டு கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
 இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபர் மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த ரன்மினி தேவகே துசித்த குமார ராஜபக்ஸ என்பவராவார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான  இவர்  முன்னாள் இராணுவ வீரராவார்.  இவர் 16 குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்பதுடன்  இவர் மீது 5 பிடிவிறாந்துகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன


 இரண்டாவது சந்தேக நபர் பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த  தென்னகோன் முதியாதன்சலாகே யசரத்ன தென்னகோன் என்பவராவார். இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஜப்பான் மொழி டிப்ளோமா பட்டம் பெற்றவராவார். அத்துடன் ஐந்து மொழிகள் தெரிந்தவாரவார்.
மூன்றாவது சந்தேக நபர் புத்திக ஜனஞ்சய ஹேரத் என்பவராவார். இவர் இங்கிலாந்தில் ஆங்கில மொழி டிப்ளோமா  பெற்றவராவார். கொள்ளைச சம்பவத்துடன் நான்கு நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர்கள் வாகனத்தில் சென்று வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளமையும்,  வங்கியில் உள்ள ஏ.ரி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தை எடுப்பதற்கு வேல்டிங் உபகரணத்தை பயன்படுத்தியுள்ளமையும்  விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. 
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாணை இடம்பெறுகின்றன. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை மெதகம பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காதக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியலால் தசநாயக்கவின் ஆலோசனையின் பேரில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹனவின் வழிகாட்டலில் சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவின் பொறுப்பதிகாரி  பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.ஆர்.ஏ. ஜி. மனோகர, பொலிஸ் பரிசோதகர்களான  எம். ரஹுப், எச்.எம்.சந்தன,  டெனி பெரேரா, கான்ஸ்டபிள்களான அமல், ஜயசிங்க , சமித்  ஜயசேகர ஆகியோர்  சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.







No comments:

Post a Comment