Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, February 1, 2020

நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரியின் நூற்றாண்டை (1920-2020) முன்னிட்டு மாபெரும் நடைபவனி (PHOTOS)


நீர்கொழும்பு அல்-  ஹிலால் மத்திய  கல்லூரியின் நூற்றாண்டை (1920-2020) முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (2-2-2020) காலை மாபெரும் நடைபவனி நடைபெற்றது.
இதில்  பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை சமூகத்தினர் உட்பட  ஆறாயிரத்துக்கும்  (6000) மேற்பட்டோர் பங்குபற்றினர்.
 கல்லூரி அதிபர் எம்.எஸ்.எம். சஹீர் தலைமையில்  நடைபவனி (பாத யாத்திரை)  ஆரம்பமாவதற்கு முன்பாக கல்லூரி மைதானத்தில் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

 கல்லூரி அதிபர் உரையாற்றும்போது, 



கம்பஹா மாவட்டத்தில் மூன்று மொழிகளிலும் கற்பிக்கும்  ஒரே ஒரு  மும்மொழி முஸ்லிம் பாடசாலை நீர்கொழும்பு அல்-  ஹிலால் மத்திய  கல்லூரி எனவும், இந்த பாடசாலையை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்துவதற்கு பிரதி அமைச்சர் நிமல்லான்ஸா நடவடிக்கை எடுப்பதற்கு  உத்தரவிட்டுள்ளதாக இன்று காலை தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறினார். அத்துடன் 101 ஆண்டில் காலடி வைத்துள்ள பாடசாலையின் நூற்hண்டு விழா இலக்கு கல்வி மறுமலர்ச்சியை நோக்கி பயணிப்பதாகும் எனவும் தெரிவித்தார்.






நிகழ்வில் பிரதி அமைச்சர் நிமல் லான்ஸா, மேல் மாகாண முன்னாள் உறுப்பினர் ஷாபி ரஹீம், நீர்கொழும்பு பிரதி மேயர் எம்.ஏ. இஸட். பரீஸ், பொலிஸ் அதிகாரிகள், கல்லூரியின் முக்கியஸ்த்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் கிராஅத ஓதல் இடம்பெற்றது. பின்னர்  தேசிய கொடி, பாடசாலை கொடியேற்றல், தேசிய கீதம் இசைத்தல், 100 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில் மாணவிகள் பங்குபற்றிய  உடற்பயிற்சிக் கண்காட்சி உட்பட பல அம்சங்கள் இடம்பெற்றன.






 தொடர்ந்து ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்குபற்றிய நடைபவணி ஆரம்பமானது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை சமூகத்தினர் உட்பட பலரும்  பங்குபற்றினர்.
 நடை பவனி கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகி பெரியமுல்லை சந்தி, நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வழியாக கொப்பரா சந்தி,; மீரிகமை வீதி வழியாக சென்று கல்லூரியை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து வாகன பேரணியும் இடம்பெற்றது.








































                              படப்பிடிப்பு -    M.Z. Shajahan


No comments:

Post a Comment