நீர்கொழும்பு
நகரிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் மோட்டார் சைக்கிளில் சென்று வீதிகளில்
சென்று கொண்டிருப்போரின் நகைகளை கொள்ளையிட்டு வந்த நான்கு பேரை நிர்கொழும்பு குற்றத்தடுப்புப்
பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் சந்தேக
நபர்களால் கொள்ளையிடப்பட்ட 31 தங்க சங்கிலிகளையும் பொலிஸார் மீட்டுள்ளதோடு
கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்களையும்
பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பாக நீர்கொழும்பு
பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் பரிசோதகர்
ஐ.டி.எஸ். விக்ரமசிங்க தெரிவிக்கையில்,
எமக்கு கிடைத்த
இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் நான்கு சந்தேக நபர்களையும் கைது செய்ததோடு
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு கொள்ளையிடப்பட்ட நகைகளையும் மீட்டுள்ளோம். நகைகளின்
ஒரு பகுதி அடகு வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள்
திவுலபிட்டி, மாரவில கண்டி ,
பலகத்துறை (நீர்கொழும்பு) பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர். இவர்கள் 31 நகை பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களில் இருவருக்கு எதிராக நீதிமன்றில் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் பல
வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஒருவருக்கு எதிரக 38 வழக்குகளும்
மற்றொருவருக்கு எதிராக 15 வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. சில வழக்குகளுக்கு
அவர்கள் தண்டணையும் பெற்றுள்ளனர்.
நீர்கொழும்பு
நகரிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் நகைகளை பறிகொடுத்தவர்கள் பொலிஸ்
நிலையத்திற்கு வந்து உரிய ஆதாரங்களுடன் தமது நகைகளை அடையாளம் காட்டலாம் என்றார்.
சந்தேக நபர்கள்
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி அல்லவவின் ஆலோசனையின்படி,
குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எஸ் பிரியதர்சனவின் வழிகாட்டலில் உதவிப்
பொலிஸ் பரிசோதகர் ஐ.டி.எஸ் விக்ரமசிங்கவின் தலைமையிலான குழுவினர் கைது
செய்துள்ளனர்.
No comments:
Post a Comment