இலங்கை அஹ்;மதியா முஸ்லிம்
ஜமாஅத்தின் பெண்கள் அமைப்பினரினால் வருடாந்தம் நடத்தப்படும் கண்காட்சியும்
விற்பனையும் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீர்கொழும்பு
பெரியமுல்லையில் அமைந்துள்ள மஸ்ஜித் பஸ்ல் பள்ளிவாசலின் ஜுப்லி மண்டபத்தில்
நடைபெறவுள்ளது.
சனிக்கிழமை (14-7-2012) மாலை
4
மணிக்கு ஆரம்பமாகும் முதல்நாள் நிகழ்வு
இரவு 8 மணிவரையும் நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (15-7-2012) முற்பகல்
10 மணிக்கு ஆரம்பிக்கும் நிகழ்வு மாலை 6.30 மணி வரை
நடைபெறவுள்ளது.
பெண்கள் மற்றும்
சிறுமியரின் கைவினைப் பொருட்கள், அரபு எழுத்தணிகள் , குர்ஆன் விளக்கப் படங்கள் , சுகாதாரம்
தொடர்பான விளக்கப் படங்கள், புத்தகங்கள் என்பன காட்சிக்கு
வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment