கட்டார் நாட்டின் டோஹா நகரில் அமைந்துள்ள
ஸ்டெபர்ட் சிறிலங்கா (STAFFORD SRI LANKA SCHOOL - DOHA)
பாடசாலையில்
அதிபர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் முறையற்ற விதத்தில் நீக்கப்பட்டமை தொடர்பாக கட்டாரில்
உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் (Ambassador) ஏ.எஸ்.பி. லியனகேக்கு எதிராக பதவி நீக்கப்பட்ட முன்னாள் அதிபர் மற்றும் ஆசிரியர்கள்
குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்
மாநாடு திங்கட்கிழமை (29-10-2018) மாலை கம்பஹா,
மாக்கவிட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள உற்சவ
மண்டபத்தில் நடைபெற்றது.
பதவி நீக்கப்பட்ட பின்னர் நாடு திரும்பியுள்ள
பாடசாலையின் முன்னாள் அதிபர் உபாலி ஜயசிங்க, பதவி நீக்கப்பட்ட அதிபரின் வாகன சாரதி
மற்றும் ஆசிரியர் ஒருவர் விளக்கமளித்தனர்.
முன்னாள் அதிபர் உபாலி ஜயசிங்க தெரிவித்ததாவது,
கட்டார் டோஹா நகரில் 2001 ஆம் ஆண்டு 17 மாணவர்களுடன் இந்த பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இது தனியாருக்கு சொந்தமானதாகும். அங்கு தொழில் புரியும்
இலங்கையைச் சேர்ந்த 20 பேர் கொண்ட குழு ஒன்றினால்
பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. கட்டாரில் உள்ள ஒரேயொரு இலங்கை பாடசாலை இதுவாகும். தற்போது 1300 மாணவர்கள் வரை கல்வி கற்கின்றனர்.
இவர்களில் 90 சதவீதத்தினர் இலங்கை மாணவர்களாவர்.
80 ஆசிரியர்கள் உட்பட 140 பேர் வரை அங்கு பணியாற்றுகின்றனர். இந்த பாடசாலை 20 பேர்
கொண்ட சபையினால் நிருவகிக்கப்படுகிறது.
இந்நிலையில் கட்டாரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஏ.எஸ்.பி. லியனகே பாடசாலை கணக்கில் இருப்பாகவுள்ள 40 கோடி
ரூபா பணத்தை கட்டார் தூதரகத்திற்கு தரவேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார். அந்தப்
பணம் இலங்கை அரசாங்கமோ அல்லது கட்டார் அரசாங்கமோ பாடசாலைக்கு வழங்கிய நிதி அல்ல. பாடசாலைக்கு
நிரந்தர கட்டடம் ஒன்றை அமைப்பதற்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள நிதியாகும். இதற்கு பணிப்பாளர்
சபை உட்பட நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதன் காரணமாக இலங்கை உயர்ஸ்தானிகர் எமக்கு
பல்வேறு வகைகளிலும் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இதன்காரணமாக ஆசிரியர்கள் அங்கு மன அழுத்தத்துடன் தொழில் செய்ய வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது. இந்நிலையில். பாடசாலை தவணை விடுமுறை காலத்தில் நாங்கள் நாடு திரும்பியிருந்தபோது
உயர்ஸ்தானிகர் பாடசாலையை பலாத்காரமாக கைபற்றியதாக
அறியக்கிடைத்தது. அதனை அடுத்து இலங்கையில் நாங்கள் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி
இதுதொடர்பாக விளக்கமளித்தோம். பின்னர் தவணை விடுமுறை நிறைவடைந்து பாடசாலை ஆரம்பமாவதன்
காரணமாக கடந்த ஆகஸ்ட்; மாதம் 24 ஆம் திகதி நான் டோஹா சென்றபோது விமான நிலையத்தில் வைத்து
கடத்தப்பட்டு அங்குள்ள இலங்கை தூதரகத்திற்கு கொண்டு செல்லப்பட்டேன். அங்கு இலங்கை உயர்ஸ்தானிகர்
எனக்கு அச்சுறுத்தல் விடுத்தார். தூசண வார்த்தைகளால் ஏசினார். நான் பாடசாலையின் அதிபர்
பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக் என்னிடம் இராஜினாமா கடிதம் ஒன்றை பெறுவதற்கு முயன்றார். நான் அதற்கு இணங்கவில்லை.
நடந்த விடயம் தொடர்பாக கட்டார் நாட்டில் பாடசாலைகளை நிருவகிக்கும் கவுன்ஸிற்கு எழுத்து
மூலம் அறிவித்தேன். அதில் பாடசாலையை அதிபரின் நிருவாகத்தின் கீழ் ஒப்படையுங்கள் அல்லது
இலங்கை உயர்ஸ்தானிகரிடம் ஒப்படையுங்கள.; இரு தரப்பினரும் பாடசாலையை நடத்தமுடியாது என்று
குறிப்பிட்டிருந்தேன். இதனை அடுத்து என்னையும், எனது சாரதியையும், மூன்று ஆசிரியர்களையும்
பதவி நீக்கம் செய்தார்கள். தற்போது பாடசாலை இலங்கை உயர்ஸ்தானிகரின்; கட்டுப்பாட்டில்
உள்ளது. அங்கு எனக்கு உதவியாக இருந்த ஆசிரியை அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக இலங்கை பாராளுமன்றத்திலும், அமைச்சரவை கூட்டத்திலும்
பேசப்பட்டுள்ளது. பிரதான கட்சிகள் இதுதொடர்பாக
கவனம் செலுத்தியுள்ளன. இலங்கை உயர்ஸ்தானிகரின் கட்டுப்பாட்டிலிருந்து பாடசாலையை
விடுவிக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவி;த்தார்.
பாடசாலை அதிபரின் வாகன சாரதியாக பணியாற்றிய
எஸ். சுமித் கருத்து தெரிவித்ததாவது.
நான் கடந்த எட்டு வருட காலமாக வாகன சாரதியாக பணியாற்றுகிறேன்.
அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் சுமுகமாக பழகுவேன். அதிபரின்; மேல் உள்ள கோபத்தினால்
என்னை இலங்கை உயர்ஸ்தானிகர் பணி நீக்கம் செய்தார். மூன்று ஆசிரியர்களையும் பணி நீக்கம்
செய்தாhர். அங்கு சிறப்பான முறையில் பாடசாலை இயங்குகிறது. நடந்த சம்பம் காரணமாக பெற்றேர்கள்
கவலை தெரிவிக்கின்றனர். ஆயினும் உயர்ஸ்தானிகருக்கு பயந்து அவர்கள் எதனையும் மேற்கொள்வதில்லை. உயர்ஸ்தானிகரின் கட்டுப்பாட்டிலிருந்து பாடசாலையை
விடுவிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும் என்றார்.
No comments:
Post a Comment