ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு
மகிந்த ராஜபக்க்ஷவை பிரதமராக நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக பாராளுமன்றத்தை
கூட்டுமாறு வலியுறுத்தியும் இன்று (4) ஞாயிற்றுக்கிழமை
நண்பகல் நீர்கொழும்பு மணிக்கூட்டு கோபுரம் அருகில் நீர்கொழும்பு தேர்தல் தெர்குதியைச் சேர்ந்த ஐக்கிய
தேசியக் கட்சி ஆதரவாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீர்கொழும்பு
தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி பிரதான அமைப்பாளரும் நீர்கொழும்பு மாநகர சபையின்
எதிர்க்கட்சித் தலைவரும், நீர்கொழும்பு அபிவிருத்தி
குழுவின் இணைத் தலைவருமான ரொயிஸ் பெர்னாந்துவின் தலைமையில்
நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்
நீர்கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள, கட்சி ஆதரவாளர்கள்
உட்பட பெரும் எண்ணிக்கையானோர் பங்குபற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டோர் கறுப்புப் பட்டிகளை அணிந்திருந்ததுடன், எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட
சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.
பின்னர்;
ஐக்கிய தேசியக் கட்சி பிரதான அமைப்பாளரும் நீர்கொழம்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித்
தலைவருமான ரொயிஸ் பெர்னாந்து, மாநகர சபை உறுப்பினர்களான
முஹம்மத் நஸ்மியார், கியான் பெர்னாந்து ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் சிதறு தேங்காய் உடைந்து பிரார்த்தனை புரிந்தனர்.
அங்கு நீர்கொழம்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர்
ரொயிஸ் பெர்னாந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,
நீர்கொழம்பு
தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுவதற்கு 31 ஆயிரம் வாக்குகளை அளித்து
நகரமக்கள் பங்களிப்பு வழங்கியுள்;ளனர். இதன் காரணமாக நீர்கொழும்பு மக்களுக்கு பாராளுமன்றத்தை கூட்டுமாறு வலியுறுத்த உரிமை இருக்கிறது.
பாராளுமன்ற உறுப்பினர்களை பணத்திற்கு வாங்குவதற்காக பாராளுமன்றத்தை ஒத்திவைத்திருக்கிறார்கள். நாட்டில் ஜனநாயத்தை நிலைநிறுத்தும் வகையில் பாராளுமன்றத்தை
கூட்டுமாறு வேண்டுகிறோம் என்றார்.
No comments:
Post a Comment