Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, October 28, 2018

காணாமல் போனோரின் தேசிய தினத்தையிட்டு காணாமல் போனோரின் குடும்ம ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு


காணாமல் போனோரின் தேசிய தினத்தையிட்டு காணாமல் போனோரின் குடும்ம ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (27)  காலை 9 மணிக்கு சீதுவை ரத்தொழுகமையில் அமைந்துள்ள காணாமல் போனோரின் நினைவு தூபி அருகில்  28 ஆவது வருடமாக இடம்பெற்றது.
காணாமல் போனோரின் குடும்ம ஒன்றியத்தின் அமைப்பாளர் பிரிட்டோ பெர்னாந்துவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய நாடுகளின்  இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி  ஹெனா சிங்கர், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் ஆணைக்குழுவின் (OMP) தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி  சாலிஹ பீரிஸ்,
அமெரிக்க தூதரக பிரதிநிதி, பிரபல சிங்களப் பாடகர்  ஜயதிலக்க பண்டார, சர்வ மதத் தலைவர்கள்,  வடக்கு, கிழக்கு, தெற்கிலிருந்து வருகைத் தந்த காணாமால் ஆக்கப்பட்டோரின் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும்  மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்; உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.










 நிகழ்வில்  நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் வருகைத் தந்திருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ம உறுப்பினர்கள் தமது  உறவுகள்காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகவும், தாங்கள்  அடைந்த இன்னல்கள் தொடர்பாகவும்; மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும்   சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் அங்கு எடுத்துக் கூறினர்.





1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி வடக்கில் சத்துருகொண்டான் பிரதேசத்தில் காணாமல் ஆக்கப்பட்ட 184 பேர் தொடர்பாக  சட்டத்தரணி சம்பத் புஸ்பகுமார எடுத்துக் கூறினார்.
காணாமல் போனோரின் குடும்ம ஒன்றியத்தின் அமைப்பாளர் பிரிட்டோ பெர்னாந்து, இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி  ஹெனா சிங்கர், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் ஆணைக்குழுவின் (OMP) தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி  சாலிஹ பீரிஸ் அங்கு உரையாற்றினர்.
நிகழ்வில் பாடகர் ஜயதிலக்க பண்டார மனித உரிமை தொடர்பாக பல பாடல்களைப் பாடினார். இறுதியில்  அங்கு வருகை தந்திருந்தோர் காணாமல் போனோரின் நினைவு தூபியில் தமது உறவுகளுக்கு மலராஞ்சலி  செலுத்தினர்.








No comments:

Post a Comment