Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, October 24, 2018

FCID தாக்கல் செய்யும் வழக்குகளுக்கு ஜோன்ஸ்டன் பெர்னாந்துவின் வழக்குக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும். பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச


FCID தாக்கல் செய்துள்ள வழக்குகள் பெரும்பாலும் அவர்களுக்கு தோல்வியாவே அமைந்துள்ளன.  ஜோன்ஸ்டன் பெர்னாந்துவின் வழக்கும் அவ்வாறுதான் அமைந்தது. பழிவாங்கும் நோக்கில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளே அவைகளாகும். புழிவாங்கும் நோக்கில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு ஜோன்ஸ்டன் பெர்னாந்துவின் வழக்குக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும் என்று  தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.
சட்ட விரோத கடவுச் சீட்டைப் பயன்படுத்தி 23-10-2015 அன்று சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு எதிரான வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (23) நீர்கொழும்பு நீதிமன்றின் 
இரண்டாம் இலக்க அறையில் இடம்பெற்றது.
வழக்கு விசாரணை நிறைவடைந்து நீதிமன்றிலிருந்;து வெளியேறும் போது பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தனது கடவுச் சீட்டு காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்து புதிய கடவுச் சீட்டொன்றை பெற்றுக் கொண்டமை,  காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட பழைய கடவுச்சீட்டை பயன்படுத்தி 23-10-2015 அன்று கட்டுநாயக்க விமான நிலையம் மூலமாக டுபாய் செல்ல முற்பட்டமை தொடர்பாக  வழக்கு விசாரணை இடம்பெற்றது.
 நேற்றைய தினம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உதவி அதிகாரி பாலக ஜயந்த ரத்நாயக்கவின் சாட்சி பதிவு செய்யப்பட்டது. நீர்கொழும்பு மேலதிக நீதவான் இந்த வழக்கை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
வழக்கு  விசாரணை நிறைவடைந்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச ஊடகவியலாளர்களுக்கு  மேலும் கூறியதாவது.
 ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அறிவிவித்தல் வந்தவுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மைதானத்தில் விளையாடும்  வீரரின் பெயரை குறிப்படுவார். புpன்னர் ஏனைய வீரர்களும் இணைந்த விளையாடி வெற்றி பெறுவோம். FCID தாக்கல் செய்துள்ள வழக்குகள் யாவும் அவர்களுக்கு தோல்வியாவே அமைந்துள்ளன.  ஜோன்ஸ்டன் பெர்னாந்துவின் வழக்கும் அவ்வாறுதான் அமைந்தது. பழிவாங்கும் நோக்கில் தாக்கல் செய்யபடும் வழக்குகளே அவைகளாகும். பழிவாங்கும் நோக்கில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு ஜோன்ஸ்டன் பெர்னாந்துவின் வழக்குக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும்.  அமைச்சர் மகிந்த அமரவீரவின் கருத்தின்படி அமைச்சரவையில் ரோ அமைப்புக்கு உதவி புரியும் நான்கு அமைச்சர்கள் உள்ளனர். தற்போது ஜனாதிபதிக்கு உள்ள பொறுப்பு  அந்த நான்கு அமைச்சர்களினதும் காதைப் பிடித்து அவர்களை அமைச்சரவையிலிருந்து வெளியேற்றுவதுதான். ரோ ஒற்றர்களை அமைச்சரவையில்  வைத்துக் கொண்டு  நாட்டை நடத்த முடியாது. அந்த அமைச்சர்கள் யார் என்பதை  கூற வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment