Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, October 20, 2018

நவராத்திரியை முன்னிட்டு நீர்கொழும்பு தோப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் கலை மகள் விழா


நவராத்திரியை முன்னிட்டு நீர்கொழும்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த தோப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் கலை மகள் விழா வியாழக்கிழமை  (18)  பாடசாலையின் ஆரம்பப் பிரிவு  மைதானத்தில் அதிபர் இ. செல்வகுமார்  தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வைத்திய கலாநிதி சிவபிரகாசம் அனுஷ்யந்தன், வைத்திய கலாநிதி கே. ஜெயலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் வரவேற்புரையை பிரதி அதிபர் திருமதி சுகந்தி ரஜீவனி நிகழ்த்தினார். தலைமை உரையை அதிபர் இ. செல்வகுமார் நிகழ்த்தினார்.
அருள் நடனம், கலைமகள் துதிப்பாடல், அபிநய நடனம், வேப்பிலை நடனம், சிவதாண்டவம், காவடி நடனம், பேச்சு, நாடகம் ஆகிய கலை நிகழ்ச்சிகளும் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
பிரதம விருந்தினர் உரையைத் தொடர்ந்து விருந்தினர் கௌரவிப்பு  இடம்பெற்றது. நன்றி உரையை திருமதி மேகலா விஜயகுமார் நிகழ்த்தினார்.


















No comments:

Post a Comment