Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, October 20, 2018

'மீபுர' சிங்கள இணையத்தள ஊடகவியலாளரின் கமரா பறிக்கப்பட்டு புகைப்படங்கள் அழிக்கப்பட்டு அச்சுறுத்தல் நீர்கொழும்பல் சம்பவம்


 நீர்கொழும்பு நகரில் பிரசித்தமான 'மீபுர' சிங்கள இணையத்தளத்தின் ஊடகவியலாளரின் கமரா பறிக்கப்பட்டு அதிலிருந்த படங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் நீர்கொழும்பு  பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவில் நேற்று வெள்ளிக்கிழமை (19)888 இரவு  இரண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு மாநகர சபையினர் பெரியமுல்லை  பொது மயானத்திற்கு முன்பாக அமைந்துள்ள கட்டட நிர்மாண பொருட்களை விற்பனை  செய்யும் கடைக்கு முன்பாக வடிகானின் மேல் விற்பனைக்காக மணல் உட்பட கட்டடப் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதை அகற்றி வடிகானை சுத்தம் செய்வதற்காக  சென்றபோது அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. இதனை  செய்தி சேகரிக்கச் சென்றபோதே மீபுர இணைத்தளத்தின் ஊடகவியலாளரின் கமரா பறிக்கப்பட்டு அதிலிருந்த படங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
 அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளவர் மீபுர இணையத்தளத்தின் ஊடகவியலாளர் செம்சன்  ஞானசிறி ஆவார். ஊடகவியலாளர் செம்சன்  ஞானசிறி , மீபுர இணையத்தளத்தின் ஆசிரியர் பிரடி கமகே ஆகியோர் சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.




 கபில கோரலகே என்பவருக்கு எதிராகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இவர் நீர்கொழும்பு மேயர் தயான் லான்ஸாவின்  கீழ் பணியாற்றுபவர் எனவும், மேயரின் ஊடகப் பிரிவில் பணியாற்றும் மற்றொரு நபரே கமராவில் இருந்த படங்களை அழித்துள்ளதாகவும் மீபர இணையத்தளத்தின் ஆசிரியர் பிரடி கமகே ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இதேவேளை, மாநகர சபை ஊழியர்கள் சட்டவிரேதாமக வடிகானின் மேல் குவிக்கப்பட்டிருந்த மணல் குவியலை அகற்றுவதற்கு முற்பட்டபோது அதற்கு கடையின் உரிமையாளரும் அவரது குடும்ப அங்கத்தவர்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன்போது நகர சபையின் வாகனம் ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு நீர்கொழும்பு பொலிஸார் வந்துள்ளனர். இந்நிலையில் கடை உரிமையாளரின் மகன் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லரின் ஆலோசனையின் பேரில் குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆனந்த ஹேரத்தின் தலைமையில் சம்பவம் தொடர்பாக விசாணை மேற்கொண்டுள்ளனர்.



இதுதொடர்பாக ஊடகவியலாளர் செம்சன் தெரிவிக்கையில்
 நீர்கொழும்பு மேயர் தலைமையில் மாநகர சபை ஊழியர்கள் குறித்த ஹாட்வெயாரின் முன்பாக குவிக்கப்பட்டிருந்த கட்டடப் பொருட்களை அகற்றும் போது பிரச்சினை ஏற்பட்டது. அதனை செய்தி சேகரிக்கச் சென்றபோது எனது கமரா பறிக்கப்பட்டு அதிலிருந்த படங்கள் யாவும் அழிக்கப்பட்ட பின்னர் என்னிடம் வழங்கப்பட்டன. அத்துடன்  அவர்கள் எனக்கு எச்சரிக்கையும் விடுத்தனர் என்றார்.
 மீபுர இணையத்தளத்தின் ஆசிரியர் பிரடி கமகே தெரிவிக்கையில்,
 நீர்கொழும்பில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட சம்பவங்கள் இதற்கு முன்னர் நடந்துள்ளன. இதுதொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வழக்கொன்றும் இடம்பெற்ற வருகிறது.  நீர்கொழும்பில் நல்லாட்சி இன்னும் நிலவவில்லை என்பது எமது கருத்தாகும். நீர்கொழும்பு நகரில் ஊடக சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டும். இதுதொடர்பாக பொலிஸார் மற்றும் ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment