Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, October 18, 2018

நீர்கொழும்பில் வெளிநாட்டு நாணயமாற்று நிலையத்துக்கு சொந்தமான 11 இலட்சத்து 72 ஆயிரத்து 900 ரூபாய் பணம் கொள்ளை


  நீர்கொழும்பில்  பதினோரு இலட்சம் (சுள 1172900)  ரூபாய்  பணம்  கொள்ளையிடப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப்  பிரிவில் முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று புதன்கிழமை (17) காலை 11 மணியளவில்  நீர்கொழும்பு புனித செபஸ்தியார் வீதியில் இடம்பெற்றுள்ளது.

நீர்கொழும்பு கடற்கரை வீதியில் அமைந்துள்ள பிரபல வெளிநாட்டு நாணயமாற்று கடை ஒன்றுக்கு சொந்தமான பணமே குறித்த கடையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர்   வங்கியில் இருந்து மோட்டார் சைக்கிளில் எடுத்து வரும் வழியில் புனித செபஸ்தியார்
ஆலயத்துக்கு முன்னாள் உள்ள புனித செபஸ்தியார் வீதியில் பாலத்துக்கு அருகாமையில் வைத்து கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் பதிவாகி உள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் குறித்த ஊழியரை தாக்கி  கீழே தள்ளிவிட்டு பணப்பையை எடுத்து சென்றுள்ளதாக  முறைப்பாட்டில் பதிவாகி உள்ளது. 
  
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயகுமார் வுட்லரின் ஆலோசனைக்கு அமைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஆனந்த ஹேரத்தின்  தலைமையில் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment