இலங்கை
அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் இளைஞர் அணியினரின்
வருடாந்த தேசிய மாநாடு (இஜ்திமா) நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள மஸ்ஜித்
பஸ்ல் பள்ளிவாசலில் இளைஞர் அணியின் தலைவர் ஜனாப் பாஹிம் அஹ்மத் தலைமையில் நடைபெற்றது.
நேற்று சனிக்கிழமை (13-10-2018), மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை
(14-10-2018) ஆகிய இரு தினங்களில் இளைஞர் அணியினரின் தேசிய மாநாடு நடைபெற்றது.
காலையில்
தேசியக் கொடி மற்றும் ஜமாஅத் கொடி ஏற்றிவைக்கப்பட்டு துஆ பிராரத்தனை இடம்பெற்றது. பின்னர்
பள்ளிவாசல் மண்டபத்தில் நிகழ்வுகள் ஆரம்பமாயின.
இந்நிகழ்வில்
பல்வேறு இஸ்லாமிய போட்டி நிகழ்ச்சிகள், பொது அறிவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசில்கள்
வழங்கப்பட்டன.
ஜமாஅத்தின் முக்கியஸ்த்தர்கள் முரப்பிமார்கள், இளைஞர்
அணியினர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
நிகழ்வின்
இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment