Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, October 14, 2018

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லுரியின் வருடாந்த பரிசளிப்பு விழா


நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லுரியின் வருடாந்த பரிசளிப்பு விழா அண்மையில்   நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற கலாசார மண்டபத்தில் கல்லுரி அதிபர் என். புவனேஸ்வரராஜா தலைமையில்  அண்மையில் (9) நடைபெற்றது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் வி. மகேஸ்வரன் நிகழ்வில்  பிரதம அதிதியாக கலந்து  கொண்டார்.
 ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள்;, நலன்விரும்பிகள், பெற்றோர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 கல்லூரியில் கடந்த வருடம் (2017) பல்வேறு துறைகளிலும்; திறமை காட்டிய  மாணவர்கள்;, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில்  சித்தியடைந்த மாணவர்கள்;, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சையில் திறமை சித்தி பெற்ற மாணவர்கள், கடந்த வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள், கடந்த வருடம் பாடசாலையில் இருந்து ஒய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆகியோர் பிரதம அதிதியின் கரங்களால் சான்றிதழ்கள் பதக்கங்கள், விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் ஷெல்ற்ரன் செபறட்டணம் ஞாபகார்த்த நம்பிக்கை நிதியத்தினால் வருடாந்தம் (22வது வருடம்)  வழங்கப்படும் தலா 15000 ரூபாய்  புலமைப் பரிசில்  தொகை கடந்த வருடம் கல்லுரியில்  க.பொ.த சாதாரண தர பரீட்சையில்  மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற ஆறு மாணவர்களுக்கு நிதியத்தின் ஸ்தாபகர்                                                                அமலோற்பவ நாயகத்தினால் வழங்கப்பட்டது.
நிகழ்வில்  மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும்  இடம்பெற்றன.



படவிளக்கம்
படம் - 1 பிரதம அதிதியை பாடசாலை அதிபர் , பாடசாலை அபிவிருத்தி சபை அங்கத்தினர்., பழைய மாணவர்கள் அழைத்து வருவதையும்,




 படங்கள் 2 - 4  திறமை காட்டிய மாணவர்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்படுவதையும்,




படம் 5 ஷல்ற்ரன் செபறட்டணம் ஞாபகார்த்த நம்பிக்கை நிதியத்தினால் மாணவி ஒருவருக்கு புலமைப் பரிசில் வழங்கப்படுவதையும்


படம் 6 பிரதம அதிதிக்கு கல்லூரி அதிபர் நினைவுப் பரிசு வழங்குவதையும்

படம் 7  பிரதம அதிதி உரையாற்றுவதையும்


படம் 8  நிகழ்வில் இடம்பெற்ற நடன நிகழ்ச்சி ஒன்றையும் படங்களில் காணலாம்.



No comments:

Post a Comment