Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, March 17, 2020

அரசாங்கம் பொது விடுமுறையாக தினமாக அறிவித்ததை அடுத்து வீதிகள் வெறிச்சோடின : வர்த்தகர்கள் பாதிப்பு


 கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இன்று (17)  முதல் மேலும் மூன்று தினங்கள் (வியாழக்கிழமை வரை) அரசாங்கம் பொது விடுமுறையாக தினமாக அறிவித்ததை அடுத்து நீர்கொழும்பு நகரம்  தொடர்ந்து  வெறிச் சோடி காணப்படுகிறது.
நகரின் வர்த்தக பிரதேசம் உட்பட பெரும்பாலான இடங்களில் வீதிகளில் சன நடமாட்டம் மிகக் குறைவாகக் காணப்பட்டது. வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளபோதும் பொருட்களை வாங்குவதற்கு பொது மக்கள் மிகக் குறைவாகவே வருகை தருவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு நகரின் பிரதான பஸ் நிலையத்தில் பயணிகள் மிகக் குறைவாகக் காணப்பட்டனர். பஸ்களின் எண்ணிக்கையம் குறைவாகக் காணப்பட்டது. குறைந்த எண்ணிக்கையானோரை ஏற்றிக் கொண்டு பஸ்கள் பயணிப்பதை அவதானிக்க முடிந்தது. அத்துடன் நேற்று மாலை கொரோனா கிருமி ஒழிப்பு பணி பஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டதை அவதானிக்க முடிந்தது. நீர்கொழும்பு மாநகர சபை  நீர்கொழும்பு  பிரதான பஸ் நிலையத்தில் தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் கிருமி ஒழிப்பு வேலைகளை நேற்று  திங்கட்கிழமை ஆரம்பித்தது.





நீர்கொழும்பு ரயில் நியைத்தில் பயணிகளின் வருகை குறைவாகக் காணப்பட்டது. ரயில்களில்; மிகக் குறைந்த எண்ணிக்கையானோரே பயணிப்பதாகவும் , சேவையில்;  ஈடுபடும் ரயில்களின் எண்ணிக்கையும்  குறைக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே துறையினர் தெரிவித்தனர்.
 மக்கள் அத்தியாவசியத் தேவைக்காக மட்டுமே வெளியில் செல்வதையும் அவதானிக்க முடிந்தது. அதேபோன்று நகரின் வர்த்தக பிரதேசத்தில் உள்ள பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. திறக்கப்பட்டுள்ள உணவகங்களில் குறைந்த எண்ணிக்கையானோரே வருகை தருவதாக ஹோட்டல் தொழில் துறையினர் தெரிவித்தனர்.

  மரக்கறி சந்தைகளிலும்  மீன் விற்பனைச் சந்தைகளிலும் நுகர்வோரின் வருகை குறைவடைந்துள்ளதாகவும் அதன் காரணமாக தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment