நீர்கொழும்பு
மாநகர சபை முன்றலில் வைத்து ஊடகவியலாளர் பிரடிகமகேயை
தாக்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் நீர்கொழும்பு நீதவான்
நீதிமன்றில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில்
தாக்கப்பட்ட ஊடகவியலாளரினால் அடையாளம் காட்டப்பட்டனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை (21) நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த
முன்னிலையில் சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்போதே சந்தேக நபர்கள்
அடையாளம் காட்டப்பட்டனர்.
வழக்கின் முறைப்பாட்டாளர்
சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இந்த தாக்குதல்
சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள்
இருவர் மாத்திரம் சம்பந்தப்படவில்லை எனவும்,
இந்த தாக்குதல் ;சம்பவத்தில் பின்னணியில்
அரசியல் சக்திகள் உண்டு எனவும் , எனவே சகல சந்தேக நபர்களும் விசாரிக்கப்பட்டு நீதிமன்றில்
ஆஜர் செய்யப்பட வேண்டும் எனவும் மன்றில் தெரிவித்தனர்.
அத்துடன் இது
தொடர்பாக நீதிமன்றம் எடுக்கும் நடவடிக்கையை நாட்டில் உள்ள சகல ஊடகவியலாளர்களும் அவதானித்து
வருவதாகவும் , இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பிரதேசங்களிலும்
எதிர்ப்பு நடவடிக்கைகளும் ஆர்ப்பாட்டங்களும்
இடம்பெற்று வருவதாகவும், இச்சம்பவம் தற்போது சர்வதேச ஊடகங்களின் கவனத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும்,
எனவே சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவது விசாரணைகளை பாதிக்கும் எனவும் முறைப்பாட்டாளர்
சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றின்
கவனத்திற்கு மேலும் கொண்டு வந்தனர்.
பிரதிவாதிகள்
சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இந்த தாக்குதல் சம்பவம் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக
இடம்பெற்றதெனவும், எந்தவொரு பிணை நிபந்தனையிலாவது பிரதிவாதிகளுக்கு பிணை வழங்குமாறும்
வேண்டினர்.
இருதரப்பு சட்டத்தரணிகளும் முன்வைத்த விடயங்களை
ஆராய்ந்த பிரதான நீதவான் இந்த தாக்குதல் சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
மாநகர சபை பூமியில் வைத்து இடம்பெற்ற இந்த தாக்குதல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பக்கச் சார்பற்ற முறையில் பூரண விசாரணை
செய்து நீதிமன்றில் அறிக்கை சம்ரப்பிக்கவும்
என பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
அத்துடன் பிரதிவாதிகள்
சார்பில் விடுக்கப்பட்ட பிணை கோரிக்கையை நிராகரித்து சந்தேக நபர்களை எதிர்வரும் 28
ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
செய்தி - எம்.இஸட்.ஷாஜஹான்
செய்தி - எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment