ஊடகவியலாளர்
பிரடிகமகே நீர்கொழும்பு மாநகர சபை முன்றலில்
வைத்து தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தாக்குதலை நடத்த திட்மிட்ட நீர்கொழும்பு பிரதி மேயர் தயான் லான்ஸாவை கைது செய்யுமாறு
வலியுறுத்தியும் கொழும்பு கோட்டை ரயில் நிலையம்
முன்பாக இன்று திங்கட்கிழமை (20) மாலை எதிர்ப்பு
ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக் குழு , ஊடக அமைப்புக்கள் மற்றும் சிவில்
அமைப்புக்கள் ஒன்றிணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
அரசியல் பிரமுகர்கள் ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள்
என பெரும் எண்ணிக்கையானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றினர்.
தாக்குதல்
நடத்த திட்டமிட்ட தயான் லான்ஸாவை உடனடியாக கைது செய்யுமாறும் ஊடக சுதந்திரத்தை நிலை
நிறுத்துமாறும் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும் மேலும் சில கோரிக்கைகளை
முன்வைத்தும் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டோர் எதிர்ப்பு
கோசங்களை எழுப்பியதுடன், எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக தாக்குதல் சம்பவத்திற்கு
எதிர்ப்பு தெரிவித்து பொது மக்களிடம் மகஜர் ஒன்றில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை
இடம்பெற்றது.
செய்தி - எம்.இஸட்.ஷாஜஹான்
செய்தி - எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment