Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, September 15, 2014

நீர்கொழும்பு சென். செபஸ்தியன் கல்லூரி அதிபரை மீண்டும் நியமிக்குமாறு கோரி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

நீர்கொழும்பு சென் செபஸ்தியன் கல்லூரி அதிபரை மீண்டும் நியமிக்குமாறு கோரி  பெற்றோர்கள்  இன்று காலை  கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பாடசாலை அதிபர் அருட்சகோதரி நிலங்கா த சில்வாவை மீண்டும் பதவியை ஏற்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
காலை 8 மணிமுதல் முற்பகல் 10 மணி வரை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையான பெற்றோர்கள் கலந்து கொண்டதுடன், பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைடைகளையும்  அவர்கள் ஏந்தியிருந்தனர்.

இது தொடர்பாக பெற்றோர்கள் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது,

பாடசாலை அதிபர் h திறமையாக பணியாற்றி பாடசாலையை சகல துறைகளிலும் முன்னேற்றமடையச் செய்தவராவார். பாடசாலை இரண்டாம் தவணை விடுமுறை காலத்தில கடந்த  ஆகஸ்ட் மாதம்  24 ஆம் திகதி  அன்று பாடசாலையின் வாயில் கதவின் பூட்டை உடைத்து நீர்கொழும்பு வலயக் கல்வி அதிகாரி  கத்தோலிக்க அறநெறி பாடசாலையை நடத்த அனுமதி அளித்துள்ளார். இது தொடர்பாக   அன்றைய தினம் வலயக் கல்வி அதிகாரக்கு எதிராக  நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில்  கல்லூரி அதிபரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்மூன்றாம் தவணை ஆரம்பமாகியள்ள நிலையிலும் அதிபர் பாடசாலைக்கு வரவில்லை. உப அதிபரே பதில் அதிபராக பணியாற்றுகிறார்.












இதுதொடர்பாக வலய கல்வி அதிகாரிகளிடம் வினவியபோது அவர்கள் பின்வருமாறு தெரிவித்தனர்.
குறித்த பாசாலை அதிபர் தற்போது விடுமுறையில் உள்ளார். அவர் தனது கடமையை மீண்டும் பொறுப்பேற்பதில் தடையேதும் இல்லை. அவர் வலய கல்வி அதிகாரிக்க எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து தவறிழைத்தள்ளார் என்றனர்.


No comments:

Post a Comment