கட்டுநாயக்க - கொழும்பு
அதிவேக வீதி நிர்மானிப்பின் போது களப்புப் பகுதியில் கடற்தாவரங்கள் மற்றும் சுற்றாடலுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஈடுசெய்யும் வகையில் 2000 கடற்தாவர வகைகளை நடும் வேலைத்திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
கட்டுநாயக்க - கொழும்பு
அதிவேக வீதியில் கட்டுநாயக்க வெளியேறும் பகுதியிலிருந்து கட்டுநாயக்காவை
நோக்கிச் செல்லும் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு கடற்தாவரங்கள் நடப்பட்டன.
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கம்பஹா மாவட்ட செஞ்சிலுவை
சங்க கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வேலைத்திட்டத்திற்கு கட்டானை பிரதேச
செயலகம்,
வீதி அபிவிருத்தி
அதிகார சபை, வனஜீவி மற்றும் வன
பாதுகாப்புத் திணைக்களம், திறந்த பலகலைக்கழகம் ,
களனி
பல்கலைக்கழகம் மற்றும் சுற்றாடல்
அமைப்புக்கள் ஒத்துழைப்பு வழங்கியிருந்தன.
கட்டுநாயக்க - கொழும்பு
அதிவேக வீதியில் கொழும்பு வரையான பகுதியின் இரு பக்கங்களிலும் கடோலான
தாவரங்களைக் கொண்ட சுற்றாடலை ஏற்படுத்தி, அதில் பாடசாலை
மாணவர்களையும் பொது மக்களையும் பங்கு கொள்ளச் செய்து சுற்றாடலை பாதுகாப்பதே இதன்
நோக்கமாகும் என்று செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment