சீதுவை கிம்புலாபொக்க
களப்புப் பகுதியில் சட்விரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஆறு சந்தேக
நபர்களுடன் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மதுபானத்தையும் மதுபானம்
தயாரிக்கப் ;பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கடந்த சனிக்கிமை
அதிகாலை
(28) கைப்பறியுள்ளதாக நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ்
அதிகாரியின் காரியாலயத்தை சேர்ந்த குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
540 மதுபான ஸ்பிரிட் போத்தல்கள், 60 கோடா பெரல்கள், படகு ஒன்று, படகு இன்ஜின் ஒன்று உட்பட மேலும் பல பொருட்கள்
கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் களப்புப்
பகுதியில் இரண்டு தினங்கள் தங்கியிருந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
சீதுவை - கதிகொட – கிம்புலாபொக்க களப்புப் பகுதியில் சட்டவிரோதமான
முறையில் மதுபானம் தயாரிக்கப்படுவதாக நிர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறு;ப்பான பொலிஸ் அத்தியட்சகர்
சந்தன கலப்பதிக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து குற்றத்தடுப்புப பிரிவு
பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரீட்சகர் அமித் ராஜரத்ன தலைமையிலான குழுவினர் இந்த
சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.




No comments:
Post a Comment