Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, July 29, 2012

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 51பேருக்கு ஆகஸ்ட 10 வரை விளக்கமறியல்


நீர்கொழும்பு மோரவல கடற்பகுதியிலிருந்து சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரெலியா செல்ல முற்பட்டபோது கைது செய்யப்பட்ட 51 நபர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.என்.எம்.பி. அமரசிங்க நேற்று சனிக்கிழமை (28-7-2012)
உத்தரவிடார்.

நீர்கொழும்பு பிரதான நீதவானின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நபர்களை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று இரவு 10.30 மணியளவில் ஆஜர் செய்த போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

கடற்படையினருக்கு  கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 31 பேர் தூவ - மோரவல கடற்பகுதியில் வைத்து நேற்று சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது இன்றும் ஒரு குழுவினர் குறித்த படகில் ஏறுவதற்காக தூவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மறைந்து நிற்பதாக  அவர்கள் தெரிவித்தள்ளனர்.
இதனை அடுத்து குறித்த வீட்டிலிருந்து மேலும் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்களாவர்.

  அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக ஒவ்வொருவரும் தலா இரண்டு இலட்சம் ரூபா முதல் மூன்று இலட்சம் ரூபா வரையான பணத்தை செலுத்தியுள்ளதாக கைது செய்யப்பட்டு;ள்ள நபர்கள் தெரிவித்துள்ளனர். 



No comments:

Post a Comment