'நுளம்புகளை ஒழிக்கும் வேலைத்திட்டத்தை
நிர்கொழும்பிலிருந்து ஆரம்பிப்போம்' என்ற தொனிப் பொருளில் இன்று காலை 8 மணியளவில்
நீர்கொழும்பு மாநகர சபை முன்றலில் வேலைத்திட்டமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேல்மாகாண சுற்றுலாத்துறை வீதி அபிவிருத்தி அமைச்சர் நிமல்லான்சாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
அத்துடன்
இந்நிகழ்வில் மேல்மாண அமைச்சர்களான உதய கம்மன்பில, ஜகத் அங்ககே. நீர்கொழும்பு
மேயர் அன்ரனி ஜயவீர,மாநகர சபை உறுப்பினர்கள் , மாகாண சபை உறுப்பினர்கள்,
நிர்கொழும்பு வலய கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், நீர்கொழும்பு வைத்தியசாலை
அதிகாரிகள், கம்பஹா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள், தாதிகள் உட்பட பெரும்
எண்ணிக்கையான பெண்கள் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்திற்காக
75 இலட்சம் ரூபா பெறுமதியான நிதியினை மேல்மாகாண
சுற்றுலாத்துறை அமைச்சு ஒதுக்கியுள்ளதாகஅங்கு தெரிவிக்கப்பட்டது.
இதற்கு
நீர்கொழும்ப மாநகர சபை பங்களிப்பு வழங்கியுள்ளதாகவும் 25 ஆயிரம் வீடுகளுக்கு
பகிர்ந்தளிப்பதற்காக திட்மிடப்பட்டுள்ள பி.டி.ஐ பற்றீரியா அடங்கிய பக்கற்றுக்கள்
விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அங்கு மேலும் தெரிவிக்கப்பட்டது.
'நுளம்புகளை ஒழிக்கும் வேலைத்திட்டத்தை
நிர்கொழும்பிலிருந்து ஆரம்பிப்போம்' என்ற
இத்திட்டத்திற்கு இரண்டாயிரம் பெண்கள் சுயேட்சையான முறையில் சேவையில் ஈடுபட தெரிவு
செய்யப்பட்டுள்ளதாக மேல்மாகாண சுற்றுலாத்துறை வீதி அபிவிருத்தி அமைச்சர்
நிமல்லான்சா அங்கு தெரிவித்தார்.
No comments:
Post a Comment