எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நீர்கொழும்பு
மாவட்ட வைத்தியசாலையில் வயோதிபர்
ஒருவர் மரணமாகியுள்ளார்.
நீர்கொழும்பு, சாந்த ஜோசப் வீதியைச் சேர்ந்த கொட்டிகாபெததே கெதர பியதாச என்ற 63 வயதான நபரே எலிக் காய்ச்சலாலினால்
மரணமானவராவார். லொறிச் சாரதியான இவர்
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றிஅ ன்று இரவு
மரணமாகியுள்ளார்.
இதேவேளை, இன்று வியாழக்கிழமை நீர்கொழும்பு
மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி விசேட வைத்திய நிபுணர் எம்.என்.
ரூஹுல் ஹக் பிரேத பரிசோதனை செய்து எலிக்காய்ச்சலால்
ஏற்பட்ட மரணம் இதுவென பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மரணமடைந்த நபர் லொறிச் சாரதி என்பதால்
பல்வேறு இடங்களுக்கு பயணம் செல்கையில் செருப்பு அணியாத நிலையில் எலிகளின் மலசல
கழிவுகள் மூலம் அவருக்கு எலிக் காய்ச்சல்
ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையின் மூலம் தெரிய வந்துள்ளது
No comments:
Post a Comment