Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, September 3, 2014

நீர்கொழும்பு வைத்தியசாலையில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு யுவதி படுகொலை செய்யப்பட்ட வழக்கு: வைத்தியருக்கு மரண தண்டனை தீர்ப்பு

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வந்த இளம் யுவதி ஒருவர் பாலியல்வலலுறவு செய்யப்டபட்டு வைத்திய சாலையின் கட்டிடத்தின் ஆறாவது மாடியிலிருந்து கீழே தள்ளி   கொலை செய்யபபட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வைத்தியருக்கு நீர்கொழும்பு மேல் நீதமன்ற நீதிபதி எம்.எம்.ஏ. கபூர் இன்று புதன்கிழமை மரண தண்டனை வழங்கத் தீர்ப்பளித்தார்.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியரான இந்திக சுதர்சன பாலகே ஜயதிஸ்ஸ என்பவருக்கே நீதவான் மரண தண்டனை வழங்க தீர்ப்பளித்தார்.



கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் கடமை புரிந்து வந்த சமிலா திசாநாயக்க (23 வயது) என்ற இளம் யுவதியே 12-11-2007 அன்று பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டவராவார்.;
சந்தேக நபரான வைத்தியருக்கு எதிராக  பாலியல் வல்லுறவு புரிந்தமை மற்றும் கொலை குற்றச்சாட்டு ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டடிருந்தன.  கொலை குற்றச்சாட்டுக்காக மரண தண்டனையும், பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுக்காக 15 வருட சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஆறுமாத கால சிறை தண்டனை வழங்கவும் நீதிவானால் உத்தரவிடப்பட்டது.

ஜனாதிபதியினால் தீர்மானிக்கபபடும் தினம் ஒன்றில் இந்த மரண தண்டனையை வழங்குமாறு நீதவான் தனது தீர்ப்பின் போது குறிப்பிட்டார். சம்பவத்தை கண்ணால் காண சாட்சியங்களுக்கு அப்பால், ஆய்வுபூர்வமான சாட்சிகள், ஆதாரங்கள் மூலமாக  பிரதிவாதிக்கு எதிரான குற்றச்hட்டுக்கள் நீரூபிக்கப்பட்டுளளதாகுவ்ம் நீதவான் குறிப்பிட்டார்.
தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர் பிரதிவாதிக்கு கருத்து கூற நீதவானால் அனுமதி அளிக்கப்பட்டது. நீதிமன்றத்தால் சமிலா திசாநாயக்காவுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதைப் போன்று தனக்கும் நீதி கிடைக்க வேண்டும் எனவும்,  இததனைக் காலமும் தனக்கு அவமரியாதைகளும் அவமானமே கிடைத்ததாகவும், அதனை தான் பொறுத்துக் கொணடதாகவும், பொலிஸார் தனக்கு எதிராக மட்டுமே குற்றச்சாட்டு தெரிவித்துள்ளதாகவும், தனது கைவிரல் அடையாளம்  தொடர்பாக பொலிஸார் குற்றப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதும் அது ஏன் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் , குற்றவாளிகள் இன்னும்   நீர்கொழும்பு வைத்தியசாலையில்  இருப்பதாகவும், உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் எதிரியான வைத்தியர் இந்திக சுதர்சன பாலகே குறிப்பிட்டார்.
இன்று,காலை பிரதிவாதி நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்பின் மத்தியில் அழைத்து வரப்பட்டார்.











கொலை செய்யப்பட்ட யுவதியின் தந்தையான திசாநாயக்க முதியானசலாகே அப்புஹாமி (57 வயது), தாயார் வணசிங்க முதியானசலாகே கருணாவதி (52 வயது) ,கட்டுநாயக்க சுதநதிர வர்த்தக வலய ஊழியர்கள், சுதந்நிதர வர்த்தக வலய  மற்றும் பொது சேவா சங்கத்தின் முக்கியஸ்த்தர்கள், பெண்கள் அமைப்பு உறுப்பினர்கள் ஆகியோரும் இந்த வழக்கின் போது மன்றிற்கு சமுகமளித்திருந்தனர்.
கொலை செய்யப்பட்ட யுவதியின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பிரசந்த லால் டி அல்விஸ், சட்டத்தரணி துசிர மெலேவ்வென்த்றி ஆகியோர் மன்றில் ஆஜராகி இருந்தனர்.


சிகிச்சைக்காக வந்த யுவதியை குறித்த வைத்தியர் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர். வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே வைத்தியர் கைது செய்யப்பட்டார்.
கொலைச் சம்பவத்தை அடுத்து (13-11-2007 அன்று) வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அப்போது நீர்கொழும்பு மேலதிக நீதிவானாக பணியாற்றிய  மஹிந்த பிரபாத்சிங்க சம்பவ இடங்களை பார்வையிட்டதுடன் வைத்தியரின் அறை உட்பட பல இடங்களையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். வைத்தியரின் அறைக்கு முன்னாள் உள்ள அறையில் இருந்து யுவதியின் கைப்பை மற்றும் பாதணி உட்பட பல பொருட்கள் மீட்கப்பட்டன.








அத்துடன், 27-11-2007 அன்று நீர்கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது சந்தேக நபரான வைத்தியர் வைத்தியசாலையின் சிற்றூழியரால் அடையாளம் காட்டப்பட்டார்.
சந்தேக நபருக்கு உரிய தண்டணை வழங்குமாறு கோரி நீர்கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றிற்கு முன்பாக அமைதியான முறையில் அன்றைய தினம் ஆர்ப்பாட்டமும்; இடம் பெற்றது.

5-12-2007 அன்று இடம் பெற்ற நீதிமன்ற விசாரணையின் போது சாட்சியமளித்த வைத்தியசாலை சிற்றூழியரான திருமதி பியற்றிஸ் 12-11-2007 அன்று வைத்தியசாலையின் ஆறாவது மாடியில் சந்தேக நபரான வைத்தியர் கார்ட்போட் மட்டையொன்றை இழுத்து வருவதை (ஏழாவது மாடியில் படி ஏறும் வழியில் வைத்து) கண்டதாகவும் அதில் பெண் ஒருவர் படுத்திருந்ததை கண்டதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக தாதி ஒருவரிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.
இதேவேளை, மரண தண்டணை வழங்க தீர்;ப்பளிக்கப்பட்டுள்ள  வைத்தியர் 1611-2007 அன்று  நீரகொழும்பு சிறைச்சாலையில் வைத்து தனது காற்சட்டை நாடாவை பயன்படுத்தி தற்கொலை செய்ய முயன்றார். 15-09-2008 நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதால் மனமுடைந்த வைத்தியர் 24-09-2008 அன்று இரண்டாவது தடவையாகவும் தற்கொலை செய்ய முயன்று ஆபத்தான நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தயசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நீதிமன்றிற்கு  வருகை தந்திருந்த சமிலா திசாநாயக்காவின் பெற்றோர்கள், ஊடகங்களுக்கு தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,  ஏழு வருடங்களின் பின்னர்  தமக்கு நீதி கிடைத்திருக்கிறது. இதற்காக ஆஜரான சட்டத்தரணிகளுக்கும், சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்கும் , பல்வேறு வகையிலும் உதவியவர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றிகளைத் தெரிவிக்கிறோம் என்றனர்.



No comments:

Post a Comment