நீர்கொழும்பில் அமைந்துள்ள நகை கடை
மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று
நிலையமொன்றில்; கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்ற கொள்ளை
சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில்
கைது செய்யப்பட்டுள்ள மேல் மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும்,
ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்ப தேர்தல்
தொகுதி அமைப்பாளருமான ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவை எதிர்வரும்; 17 ஆம் திகதி வரை தொடர்ந்து
விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர்
இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவின்
சார்பில் விடுக்கப்பட்டுள்ள பிணை கோரிக்கை இன்று
மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்பட்ட போதே 17 ஆம் திகதி
வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு
நீதவான் உத்தரவிட்டார்.
மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ்
விஜித்த பெர்னாந்து நீர்கொழும்பு தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி பிரதான அமைப்பாளரும், நீர்கொழும்பு மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமாவார்.
No comments:
Post a Comment