Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, January 4, 2011


பிரதி அதிபருக்கு எதிராக தோல்வியில்
முடிவடைந்த ஆர்ப்பாட்டம்


நீர்கொழும்பு போருதொட்ட அல்பலாஹ்
முஸ்லிம் வித்தியாலயத்தின் பிரதி அதிபரை இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி பாடசாலை முன்பாக 3-1-2011 அன்று காலை இடம் பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தோல்வியிலும் ஏமாற்றத்திலும் முடிவடைந்தது.
பிதேசத்தின் இஸ்லாமிய மதப் பிரிவொன்றின் தலைமையில் உள்நோக்கத்துடன் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 பேருக்கு குறைவானோரே பங்கு பற்றினர். இதில் வேடிக்கை பார்க்க வந்தவர்களும் நடுநிலைமை வகிப்போரும் அடங்குவர்.
ஆர்ப்பாட்டத்தையிட்டு கொச்சிக்டை பொலிசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர் ​. பிரதி அதிபரை தக்கியா வீதியல் இடை மறித்து தாக்குவதற்காக குழுவொன்றும் காலை முதல் தயாராக இருந்துள்ளது.
ஆயினும் இவை பற்றிய சகல விபரங்களும் முன் கூட்டியே பிரதி அதிபருக்கு அவர்களில் சிலர் அறியத் தந்துள்ளனர்.
11-12-2010 திகதியிட்டு வலயக் கல்விப் பணிப்பாளருக்கு தான் வழங்கியுள்ள கடிதத்திற்கு இணங்க புதிய பாடசாலைக்கு நியமிக்கப்படும் வரை 3-1-2011 திகதி முதல் நீர்கொழும்பு வலயக் கல்விக்காரியாலயத்தில் தான் இணைக்கப்பட்டுள்ளதாக பிரதி அதிபர் தெரிவித்தார்.அதன் காரணமாக அன்றைய தினம் வலயக் கல்விக் காரியாலயத்திற்கு கடமைக்காக சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் பிறகு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் 16 பேர் வரையானோர் நீர்கொழும்பு வலயக் கல்விக்காரியாலயத்தின் முன்பாக முற்பகல் 9.45 மணியளவில் வந்து எதிர்ப்பு சுலோகங்கள் எழுதப்பட்ட போஸ்டர்களை சிறிதுநேரம் ஏந்தியிருந்தனர். தொடர்ந்து நீர்கொழும்பு மாநகர சபையின் ஐக்கியதேசியக் கட்சி உறுப்பினர் ஜனாப் நஸ்மியாருடன் வலயக் கல்விக்காரியாலயத்திற்குள் வந்தனர்.
இந்தவேளையில், புதுவருட பிறப்பின் பின் வருடத்தின வேளை நாள் ஆரம்பத்தையிட்டு வலயக் கல்வி காரியாலயத்தினுள் விஷேட சர்வமத பிராத்தனை நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் முடிவில் வலயக் காரியாலயத்திற்கு வெளியில் வந்த வலய கல்விப் பணிப்பாளர் ஆர்ப்பாட்டக்காரர்களை துரத்தினார். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏதும்செய்ய முடியாதவர்களாக மௌனமாக கலைந்தனர்.
இவ் வருடத்தின் வேளை நாள் ஆரம்பமாகும் தினத்தில் சர்வமத பிராத்தனை நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, காரியாலயத்திற்கு வெளியில் இதுபோன்று எதிர்ப்பு நிகழ்வு இடம் பெற்றமை தொடர்பாக சகலரும் தமது கண்டிப்பையும் விசனத்தையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மத தீவிர வாதிகளும் அரசியல்வாதிகள் சிலரும் அப்பாவி இளைஞர்களை ஏமாற்றி பிரதி அதிபரை இடமாற்றம் செய்யும் விவகாரத்தை தமது சுய நலனுக்காகவும் சொந்த இலாபத்திற்காகவும் பயன்படுத்துவதாக பிரதேச மக்களும் நகர முக்கியஸ்த்தர்களும் சுட்டிக் காட்டுகின்றனர்.
இதனால் பாதிக்கப்டுவது அல்பலாஹ் முஸ்லிம் வித்தியாலயத்தின் மாணவ செல்வங்களே என்பதை யார் அவர்களுக்கு எடுத்துரைப்பார்கள்?

1 comment:

  1. தோல்வியில் முடிவடைந்தால் நீர் ஏன் பாடசாலையை விட்டு விலக வேண்டும். எது எவ்வாறு இருப்பினும் எமக்கு வெற்றியே.

    ReplyDelete