தலாதூவ தொழிலாளர் வீடமைப்புத் திட்டத்தில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகள்
நீர்கொழும்பு , தலாதூவ பிதேசத்தில உள்ள மாநகர சபை ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் வசிக்கும் பொது மக்கள் அடிப்படை வசதிகள் தொடர்பாக பல் வேறு பிரச்சனைகளுடன் துன்பப்படுவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
குடிசை வாசிகளுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் “அருணோதய வீடமைப்புத் திட்டத்தின்” கீழ் 110 குடும்பங்கள் வசிக்கும் இந்த வீடமைப்புத் தொகுதியில் முதற்கட்டமாக 86 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு 30-10-+2009 அன்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. மிகுதி 24 குடும்பங்களுக்கும் இன்றைய திகதி வரை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை. அவர்கள் அனைவரும் அந்த வீடமைப்புத் திட்டத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியிலேயே தகரத்தில் கொட்டில்கள் அமைத்து 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பெரும் துன்பத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கும் வீடுகள் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.அதற்கான சான்றிதழும் அவர்களுக்கு வங்கப்பட்டுள்ளது.
கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள வீடுகள் ஒவ்வான்றும் இரண்டு இலட்சம் ரூபா செலவில் 250 சதுர அடி பரப்பில் உள்ளன.வீட்டின் கீழ்ப்பகுதியே கட்டி முடிக்கப்பட்டுள்ளது மேல் பகுதி கட்டி முடிக்கப்படாததன் காரணமாக வரவேற்பறையும் சமையலறையும் கொண்ட சிறிய பகுதியிலேயே ஒவ்வொரு குடும்பமும் அசௌகரியங்களுடன் வாழ்ந்து வருகிறது.
அந்த வீடமைப்புத் தொகுதியில் சுற்றுச் சூழலின் சுகாதார நிலை மிக மோசமாக உள்ளது.வடிகான்கள் நிரம்பி வலிந்தோடுகின்றன. நுளம்புகள் அதிகரித்துள்ளன.வீட்டு சுவர்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இது தொடர்பாக அந்த மக்கள் தமது ‘ஜனசக்தி பிரஜா மண்டலய “ அமைப்பினூடாக அதி மேதகு ஜனாதிபதி (3-3-2010 அன்று) ,மேல் மாகாண சபை அமைச்சர் நிமல் லான்ஸா, பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ன, வீடமைப்பு நிர்மாணத் துறை, பொறியியல் சேவைகள் அமைச்சர் (7-6-2010 அன்று) லசன்த அழகியவன்ன , நீரகொழும்பு மேயர் , பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷணி பெர்னாணடோ புள்ளே உட்பட பலருக்கும் கடிதம் மூலமாக அறிவித்துள்ளனர்
ஆயினும் இது வரை எந்தவித முனேற்றமும் ஏற்படவில்லை என அந்த மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.இவர்கள் அனைவரும் தமிழ் மக்கள் என்பதும் நீர்கொழும்பு மாநகர சபையில் சிற்றூழியர்களாக வேலை செய்பவர்களின் குடும்பத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
.
No comments:
Post a Comment