வெளிநாடுகளில் வேலை பெற்றுத்தருவதாக
கூறி ஏமாற்றி நான்கு கோடி ரூபா பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு
முகவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான
நீதவான் ஏ.எம்.என்.எம்.பி. அமரசிங்க இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
தனது மனைவியுடன் சேர்ந்து சீதுவை
லியனகே முல்லை பிரதேசத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தை
நடத்திவரும் பி.ஜே.பி. குமாரசிறி என்பவரே விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவிடப்பட்டவராவார்.
சந்தேக நபரின் மனைவி தற்போது
தலைமறைவாகியுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில்
தனது முகவர் நிலையத்தை பதிவு செய்துள்ள சந்தேக நபர், பத்திரிகைகளில் விளம்பரம்
செய்து 56 பேரிடம் நான்கு கோடி ரூபா வரையில் பணத்தை மோசடி செய்துள்ளதாகவும், மோசடி
செய்த பணத்தில் காணி ஒன்றை கொள்வனவு செய்துள்ளதுடன், பினான்ஸ் கம்பணி ஒன்றில்
முதலீடு செய்துள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டது.
சந்தேக நபரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்த
பலர் இன்று நீதிமன்றம் வந்திருந்தனர்.
No comments:
Post a Comment