இச்சம்பவம்
இன்று சனிக்கிழமை (6) அதிகாலை நான்கு மணியளவில்
தடுகம் ஓய பாலம் அருகில் இடம்பெற்றுள்ளது.
கனேமுல்ல
பிரதேசத்தைச் செர்ந்த அமுனுகொட சஞ்சீவ (45 வயது) என்ற சந்தேக நபரே தடுகம் ஓய ஆற்றில்
மூழ்கி இறந்தவராவார்.
பெண்ணின்
கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபரான சம்பவத்தில் பலியான நபரை, பொலிஸார் சிலாபத்தில் வைத்து பதுங்கியிருந்த நிலையில்
கைது செய்து அழைத்து வரப்படும்போது தடுகம் ஓயவில் பாய்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாதாள உலகத்தைச் சேர்ந்த சந்தேக நபருக்கு எதிராக
கொலை, கொள்ளை, கப்பம் பெறுதல் ஆகிய குற்றச் செயல்கள் தொடர்பாக பத்து வழக்குகள் உள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.
தப்பிப்பதற்கு
முயன்ற போது பத்து அடிக்கு மேல் ஆழமான ஆற்றின்; பகுதியில் சந்தேக நபர் மூழ்கி
மரணமாகியுள்ளதாகவும் சந்தேக நபரின் சடலம் ராகமை வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக
வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு
பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர், ஜா – எல பொலிஸார், களனி குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment