Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, September 9, 2017

150 இலட்சம் ரூபா பெறுமதியான உடைமைகளை கொள்ளையிட்ட 22 வயதுடைய இளைஞர்கள் இருவர் கைது

150 இலட்சம் ரூபா பெறுமதியான உடைமைகளை கொள்ளையிட்ட 22 வயதுடைய இளைஞர்கள் இருவரை நீர்கொழும்பு பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களை கடந்த வெள்ளிக்கிழமை (8) இரவு 9 மணியளவில் நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசத்தில் வைத்து கைது செய்ததாகவும், சந்தேக நபர்கள் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்திய நவீன ரக கார் ஒன்றை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த
22 வயதுடைய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளவர்களாவர்.
சந்தேக நபர்கள் வாடகைக்கு பெற்ற காரில் பயணம் செய்து கொச்சிக்கடை, நீர்கொழும்பு, புத்தளம் ஆகிய பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள வீடுகளில் பணம், நகை உட்பட  பெறுமதியான பொருட்களை திருடியுள்ளனர்.  சந்தேக நபர்களால் திருடப்பட்ட பொருட்களின் பெறுமதி 150 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமானது  என தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர்களில் ஒருவர் திருடப்படவுள்ள வீடுகளுக்கு வாகனத்தை செலுத்தி செல்ல மற்றைய சந்தேக நபர்; வீட்டின் யன்னல் அல்லது கதவுகளின் வழியாக வீட்டில் நுழைந்து திருடியுள்ளார். திருடப்பட்ட நகைகளை சந்தேக நபர்களின் காதலிகளின் மூலமாக  நகை அடகு பிடிக்கும்  நிலையங்களில் அடகு வைத்துள்ளமையும், திருடிய பணத்தைக் கொண்டு சந்தேக நபர்கள் தமது காதலிகளுடன்   நட்சத்திர ஹோட்டல்களுக்குச் சென்று  ஆடம்பரமாக செலவிட்டுள்ளமையும்    விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
நீதிமன்றில் ஆஜர் செய்வதற்காக சந்தேக நபர்கள் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுர சேனாரத்ன த சில்வாவின் ஆலோசனையின் பேரில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹனவின் வழிகாட்டலில் பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி சுதத் நிவுன்ஹெல்ல தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேக நபர்களை கைது செய்ததுடன் கொள்ளைக்குப் பயன்படுத்திய வாகனம் மற்றும் திருடப்பட்ட நகைகளை கைப்பற்றியுள்ளனர்.


No comments:

Post a Comment