நீர்கொழும்பு விஜயரத்தினம்
இந்து மத்திய கல்லூரி பழையமாணவர் மன்றம்
ஏற்பாடு செய்துள்ள நெய்தல்
நூல் வெளியீட்டு அரங்கு எதிர்வரும்
28-02-2015 சனிக்கிழமை
மாலை 3 மணிக்கு கல்லூரி
மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பழையமாணவர் மன்றத்தின்
தலைவரும் நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சதிஸ் மோகன்
தலைமையில் நடைபெறவுள்ள இந்த
அரங்கில் திருமதி திலகமணி
தில்லைநாதன் ( முன்னாள்
ஆசிரியர்) . நா. புவனேஸ்வரராஜா. (தற்போதைய அதிபர்) திரு. நடராஜா , ந. கணேசலிங்கம் (முன்னாள் அதிபர்கள்) ஆகியோர்
வாழ்த்துரைகளை நிகழ்த்தவுள்ளனர்.
திரு.
வீ. தனபாலசிங்கம் ( பிரதம ஆசிரியர் -
தினக்குரல்) திருமதி அன்னலட்சுமி இராஜதுரை (
ஆசிரியர் - கலைக்கேசரி ) மல்லிகை ஜீவா ஆகியோரின்
சிறப்புரைகளும் இடம்பெறவுள்ளன.
கல்லூரியின் முன்னாள் மாணவர்
கவிஞர் நீர்கொழும்பு ந.
தருமலிங்கம் வாழ்த்துப்பா
வழங்கவுள்ளார்.
நெய்தல் நூல்
நயப்புரைகளை படைப்பாளி, ஊடகவியலாளர் திரு. கருணாகரன் , கொழும்பு இந்து
சமய கலாசார அலுவல்கள் திணைக்கள அதிகாரி
திருமதி தேவகுமாரி ஹரன் , மூத்த படைப்பாளி தெளிவத்தை ஜோசப் , கவிஞர் மேமன்கவி, மூத்த எழுத்தாளர்
ஜனாப் மு. பஷீர் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.
நெய்தல் நூலை
தொகுத்திருக்கும்
கல்லூரியின் முதல் மாணவரும் படைப்பிலக்கியவாதியுமான திரு. லெ. முருகபூபதி ஏற்புரையையும் , பழைய மாணவர் மன்றத்தின் செயலாளர் ஆர். அரவிந்தன் நன்றியுரையையும் நிகழ்த்தவுள்ளனர்.
விஜயரத்தினம் இந்து
மத்திய கல்லூரியில் பயிலும்
ஆறு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும்
நிகழ்வும் கல்லூரி ஆவணக்காட்சியகம் திறந்துவைக்கப்படும் நிகழ்வும் இந்த அரங்கில்
இடம்பெறவுள்ளது.
No comments:
Post a Comment