மண் வெட்டுவதற்கு கப்பம் கொடுக்க மறுத்தவர்கள் மீது
வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம்
கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடம்பெல்ல வீதி . ஹல்பேவில பிரதேசத்தில்
இடம்பெற்றுள்ளது.
மடம்பெல்ல, கொடெல்லவத்த
பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரர்களான நிலங்க, கல்யாண் என்பவர்களே
காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் நேற்று திங்கட்கிழமை
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலங்க என்பவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆறு தையல்
போடப்பட்டுள்ளதுடன் இடது கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. . அவரது சகோரரரின் இடது கை கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இருவரும்
வைத்தியசாலையில் வைத்து இன்று ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
செங்கல் தயாரிப்பதற்கான மண் வெட்டி எடுக்கும் தொழில் செய்து
வந்த எமக்கு கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஹல்பேவில பிரதேசத்தில் மண்
எடுப்பதற்கு சிலர் கப்பம் கேட்டனர். கடந்த சனிக்கிழமை (21)
ருவன் என்ற நபர் எம்மை சந்தித்து இங்கு மண் வெட்டி எடுப்பதாக
இருந்தால் மேல் மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இருவரின் பெயரைக் குறிப்பிட்டு (சட்டத்தரணி ரோஸ்
பெர்னாந்து, கித்சிறி மஞ்சநாயக்க) அவர்களை
சந்திக்குமாறு கூறப்பட்டது. இது தொடர்பாக அன்றைய (21) தினம் கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தோம். நேற்று திங்கட்கிழமை(23)
நாங்கள் மீண்டும் மண்
வெட்டினோம். அப்போது 30 பேர் வரையான குழுவினர் வாள்
மற்றும் பொல்லுகளைக் கொண்டு எங்களைத் தாக்கினர். எம்மைத் தாக்கிய குழுவினர்
மடம்பெல்ல, கொடெல்லவத்த பிரதேசத்தைச்
சேர்ந்தவர்களாவர். அவர்களது பெயர்களை முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளோம் என்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக கொச்சிக்டை பொலிஸார் விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment