நிர்கொழும்பு கடற்பகுதியில் மாடு ஒன்றின் முகத் தோற்றத்தை
கொண்ட மீன் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.
அதனை நீர்கொழும்பு தளுபத்தை விளையாட்டு மைதான மாவத்தையை
சேர்ந்த எம். அஸ்ரப் என்பவர்
நீர்கொழும்பு கொட்டுவ திறந்த மீன் விற்பனை சந்தையில்
விலை கொடுத்து வாங்கியுள்ளார்.
ஒரு கிலோகிரேம் நிறை கொண்ட
இந்த மீனின் கண்கள், வாய், மூக்கு, கொம்புகள் மாட்டின் முகத் தோற்றத்தை
கொண்டதாக உள்ளது.
காண்பவர் அனைவரையும் வியப்பில்
ஆழ்த்தியுள்ள இந்த மீனை பார்க்க பலரும் வருகை தருவதாக அந்த மீனை கொள்வனவு
செய்துள்ள எம். அஸ்ரப் தெரிவித்தார்.
இந்த மீனைக் "குட்டுறு" எனக் கூறுவார்கள். இதை மீனவர்கள் சுட்டே சாப்பிடுவதாக, காவலூர் ஜெகநாதன் எனும் எழுத்தாளர் (ஊர்காவற்றுறையைச் சேர்ந்தவர்) தன் நாவல் ஒன்றில் குறிப்பிட்டதை, நான் 35 வருடங்களுக்கு முன் வாசித்துள்ளேன்.
ReplyDeleteஇதைக் கண்டுமுள்ளேன். இதன் உடல் ஆமை ஓடுபோல் வலுவானது. இதன் உணவு, பவளப் பாறைகள்.
வேகமாக நீந்தமுடியாதது.இது பற்றி நீர்கொழும்பு மீனவர்கள் விளக்கம் கூறாதது ஆச்சரியமாக உள்ளது.